அப்பாவி -திரை விமர்சனம்
தேர்தல் சமயத்தில் அரசியல் சார்ந்த இன்னொரு பழி வாங்கும் படம் அப்பாவி. நவீன உலகிற்கு ஏற்றவாறு எம்.எம்.எஸ்.கொலை.
கலெக்டர் மகன் கௌதம், ஆசிரியரான தன் தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற புறப்படுகிறார். சமூகத்தில் அநியாயம் செய்யும் அரசியல் வேட்பாளர், மின்துறை அமைச்சர், தீவிரவாதி, அரசியல்வாதி, பத்திரிகையாளர் என்று பல்வேறு மனிதர்களை கொலை செய்து அவர்களது செல்போனிலே நாட்டு மக்கள் அனைவருக்கும் எம்.எம்.எஸ். அனுப்புகிறான். அந்த எம்.எம்.எஸ். கொலையாளியான கௌதமை போலீஸ் கண்டு பிடித்து கைது செய்ததா? என்பதே படத்தின் உச்சக்கட்ட க்ளைமேக்ஸ்.
கௌதம், கே.பாக்யராஜ், மகாதேவன், சூரி, சம்பத், கிருஷ்ணப்பா, மனோபாலா, சுஹானி, ஸ்ரீரஞ்சனி, தஸ்லிமா ஆகியோரின் பாத்திரப் படைப்புகள் அருமை.
இசை-ஜோஸ்வா ஸ்ரீதர், ஒளிப்பதிவு-இ.கிருஷ்ணசாமி படத்தின் வெற்றிக்கு ப்ளஸ் பாயிண்ட்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ஆர்.ரகுராஜ். அரசியல் சூழ்நிலையை தைரியமாக ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களால் தோலுரித்து காட்டுவதும், அதற்கு தீர்வை சொல்வது பலம் என்றால் தனி மனிதனாக இத்தனை கொலைகளை செய்வது நம்பும்படியாக இல்லை, போலீஸால் இதை கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதும் சில இடங்களில் தடுமாறியிருப்பது அதுவே பலவீனம். ஆனால் அரசியல் நெடியுடன் நெத்தியடியாக தைரியமாக வெளிவந்திருப் பதற்காகவே பாராட்டலாம்.
அப்பாவி சில இடங்களில் வருகிறது கொட்டாவி ஆனாலும் ரசிக்கலாம்.

No comments:
Post a Comment