Tuesday, April 12, 2011


மின்சாரம் -திரை விமர்சனம்

அரசியல், மாணவர் போராட்டம், தாதா கும்பல் என்று கலந்து பழைய படமான ரமணாவின் சில பகுதிகளை ஒருங்கிணைத்த கதைக்களம் தான் மின்சாரம்.

ஊரில் பெரிய தாதாவான ரவுடியும், அவனது தம்பியும் சேர்ந்து கொண்டு கல்லூரி மாணவரான யுவராஜின் தங்கையை ஈவ் டீசிங் செய்ய அதை தட்டிக் கேட்கும் யுவராஜின் குடும்பத்தையே அழிக்கிறான் ரவுடி. அதற்கு காரணமானவர்களை கடத்திக் செல்லும் யுவராஜ் முதல்வருக்கே ஈமெயில் மூலம் கடத்தியவர்களை விடுவிக்க வேண்டுமானால் ஜாமீன் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான். முதல்வர் மாணவர்களின் நிபந்தனையை ஏற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ்.

புதுமுகங்கள் யுவராஜ், மதுசந்தா, சவுகந்தி, முத்துசாமி, பாலாசிங், என்னுயிர் தோழன் ரமா, சுஜிபாலா, கானா உலகநாதன், நாடோடிகள் நாகு, நெல்லை சிவா, கோவை செந்தில், நிவேதா, மகா ஆகியோருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தன் நெடு நாள் ஆசையான முதல்வராக நடித்து நிறைவேற்றிருப்பதும் படத்திற்கு கூடுதல் பலம்.

இசை-டி.தேவன், கானா உலகநாதனின் குத்தாட்டப் பாடலும், தொல். திருமாவளவன் பாடும் எழுச்சி பாடலும் செவிக்கு விருந்தாக அமைகிறது.

ஒளிப்பதிவு-கே.வி.சுரேஷ். காட்சிக் கோணங்கள் பரவாயில்லை ரகம்.

இயக்கம்-என்.செல்வகுமாரன். அரசியல் அநீதியோடு ரவுடி கூட்டணியை மாணவர்கள் முதல்வரோடு சேர்ந்து முறியடிக்கும் கதை என்றாலும் அதில் சில இடங்களில் ட்விஸ்ட் என்ற பெயரில் லாஜிக் இல்லாமல் அனைத்து அம்சங்களையும் கலந்து கொடுத்து பொறுமையை சோதித்தாலும் முதல்வர் கெட்டப்பில் திருமாவளவன் அசத்துவது பரவாயில்லை.

ஷாக் அடிக்காத மின்சாரம் ஒரு மின்வெட்டு.

 

No comments:

Post a Comment