வீரசேகரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, சிந்து சமவெளி படத்தில் மாமனாருடன் சல்லாப காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி, மைனா படத்தின் மூலம் உச்சத்திற்கு போன நடிகை அமலாபால், இப்போது முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களின் விருப்ப நாயகியாக மாறியுள்ளார். விரைவில் இவர் நடிப்பில் விக்ரமுடன் இணைந்து நடித்திருக்கும் தெய்வத்திருமகன் படம் ரிலீசாக இருக்கிறது. இதுதவிர லிங்குசாமியுடன் வேட்டை, மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று வரிசையாக தொடர்ந்து கைநிறைய படங்கள் வைத்துள்ளார்.
கைநிறைய படங்கள் இருந்தும், இப்போது புதிதாக காஸ்டியூம் டிசைனராகவும் மாறி, அதிலும் கல்லா காட்ட முடிவெடுத்து இருக்கிறார். சமீபத்தில் தன்னுடைய படத்திற்காக அவரே ஒரு சேலையை டிசைன் பண்ணி, அதை மும்பையில் உள்ள பிரபல காஸ்டியூமர் ஒருவருக்கு அனுப்பினாராம். அமலா பாலின் இந்த காஸ்டியூம் டிசைனை பார்த்து அங்கிருக்கும் பாலிவுட் நடிகைகளே வியந்துபோய், யார் இதை தயாரித்தது என்று கேட்டார்களாம். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அமலா பால், இனி வரப்போகும் தன்னுடைய படங்களுக்கு, தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்ற இருப்பதாகவும், இதற்காக தன்னுடைய சம்பளத்துடன் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்ட அவர் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
.
No comments:
Post a Comment