Sunday, August 29, 2010

                                      பாணா காத்தாடி விமர்சனம்
பிளஸ்டூ படிக்கும் அதரவா  கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமந்தாவை காதலிக்கிறார்.அவரும் அதர்வாவை காதலிக்கிறார்,லாஜிக் வரக்கூடாது என்பதற்காக 'என்னை எட்டு வயதில் தான் ஸ்கூல்ல சேர்த்தாங்க' என ஒரு டயலாக்கில் சப்பைக்கட்டு காட்டுகிறார் அதரவா.
தினசரி போகும் பஸ்ஸில்இறுதிக்காட்சியில்அதரவாவிடம் மீண்டும் சமந்தா காதலைப் புதுப்பிக்கும் போது பஸ்ஸில் இருந்து அதரவா தவறி விழுந்து பஸ்ஸில் அடிபட்டு இறந்து விடுகிறார்.
நாயகனாக நடிகர் முரளி மகன் அதரவா அறிமுகம்.நடிப்பு பரவாயில்லை.தோற்றத்திற்கும்,குரலுக்கும் சம்மந்தமில்லை.(சொந்தக்குரல்) பீங்கானை சாப்பிட்டுவிட்டு பேசுவது போல் உள்ளது.
சமந்தாவின் இளமையை ரசிக்கலாம்.அதரவாவின் அம்மாவாக மௌனிகா.அவர் பேச ஆரம்பித்தாலே அலறி ஓட வேண்டியிருக்கிறது.அவரது குரலும்,சென்னை பாஷையும் படு செயற்கைத்தனம்.
பாணா காத்தாடி-மாஞ்சாவும் சரியில்லை.நூலும் சரியில்லை என்பதால் பட்டம் பறக்கவில்லை.
 முத்‌த கா‌ட்‌சி‌யி‌ல்‌ அதி‌க டே‌க்‌ வா‌ங்‌கி‌ய நடி‌கர்‌‌

வெ‌ண்ணி‌லா‌ கபடி‌ குழு’ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌தவர்‌ வி‌ஷ்‌ணு. இவர்‌ தற்‌போ‌து மணி‌ரத்‌னம்‌ உதவி‌யா‌ளர்‌ சுதா‌ கே‌. பி‌ரசா‌த்‌ இயக்‌கும்‌ ‘துரோ‌கி’‌ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌து வருகி‌றா‌ர்‌. அவருக்‌கு ஜோ‌டி‌யா‌க பூ‌‌னம்‌ பஜ்‌வா‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. இவர்‌கள்‌ இருவரும்‌ நடி‌த்‌த கா‌தல்‌ கா‌ட்‌சி‌ அண்‌மை‌யி‌ல்‌ படமா‌க்‌கப்‌பட்‌டது. கா‌ட்‌சி‌யி‌ன்‌ படி,‌ பூ‌னம்‌ பஜ்‌வா‌வு‌க்‌கு வி‌ஷ்‌ணு முத்‌தம்‌ கொ‌டுக்‌க வே‌ண்‌டும்‌.

ஆனா‌ல்,‌ பூ‌‌னம்‌ பஜ்‌வா‌ நடி‌ப்‌பதற்‌கு தயா‌ரா‌க இருந்‌தா‌ர்‌. கதா‌நா‌யகன்‌ வி‌ஷ்‌ணுவு‌க்‌கு பதட்‌டம்‌ வந்‌துவி‌ட்‌டது. ஆக்‌ஷன்‌ கா‌ட்‌சி‌களி‌ல்‌ அதி‌ரடி‌யா‌க நடி‌த்‌து படப்‌பி‌டி‌ப்‌பு‌ குழுவி‌னரி‌ன்‌ ஏகோ‌பி‌த்‌த பா‌ரா‌ட்‌டுகளை‌ பெ‌ற்‌றவர்‌, முத்‌த கா‌ட்‌சி‌ என்‌றதும்‌ பயந்‌து வெ‌ளவெ‌ளத்‌துப்‌ போ‌னா‌ர்‌. ஒரு டே‌க்‌கி‌ல்‌ நடி‌த்‌து முடி‌ப்‌பதற்‌குள்‌ அவருக்‌கு வே‌ர்‌த்‌து கொ‌ட்‌டி‌வி‌ட்‌டதா‌ம்‌. இப்‌படி‌ பத்‌து டே‌க்‌ வரை‌ நடி‌த்‌து, அத்‌தனை‌யு‌ம்‌ ஓகே‌. ஆகா‌மல்‌ போ‌ய்‌, கடை‌சி‌யி‌ல்‌ பதி‌னோ‌ரா‌வது டே‌க்‌கி‌ல்‌ முடி‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.
இது பற்‌றி‌ அவர்‌ கூறும்‌ போ‌து, “காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அப்போது எனக்கு படபடப்பாக இருக்கும். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. பூனம் பஜ்வா கூலாக இருந்தார். என்‌னா‌ல்‌தான் அது பல டேக்குகள் போனது” என்றார்.