Saturday, April 23, 2011

மீண்டும் காட்டுகிறார் அஞ்சலி
  அஞ்சலி நடிக்க வந்த புதிதில் ஒப்பந்தமான படம்தான் இந்த மகாராஜா. ஆனால் படம் ரொம்ப காலமாக கிடப்பில் கிடந்தது. இடையில் அங்காடித் தெருவில் அஞ்சலி லைம்லைட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து அவர் நடித்து கிடப்பில் போடப்பட்டிருந்த பல படங்களையும் வேகமாக தூசி தட்டி திரைக்குக் கொண்டு வர கிளம்பினர். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் இந்த மகாராஜா.


இப்படத்தில் அஞ்சலி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தபோதே கவர்ச்சிதான் பிரதானம் என்று சொல்லி விட்டார்களாம். இதற்குமுன்பே ஆயுதம் செய்வோம் படத்தில் அஞ்சலி கவர்ச்சி காட்டிவிட்டார்.இடையில் அங்காடித் தெரு படத்தில் அமர்க்களமான ஹிட்டைக் கொடுத்த அஞ்சலி, கவர்ச்சியாக நடித்தால் தனது இமேஜ் கெட்டுப் போகுமே என்று கூறிப் பார்த்துள்ளாராம். ஆனால் ஒப்புக் கொண்டபடி நடித்தாக வேண்டும் என்று கூறி விட்டனராம்.

இருந்தாலும் படத்தில் அஞ்சலியின் கவர்ச்சி பிரமாதமாக வந்துள்ளதாம். இதனால் கோலிவுட்டில் கவர்ச்சிகரமாக ஒரு ரவுண்டு வருவார் அஞ்சலி என்கிறார்கள்.

No comments:

Post a Comment