நல்லாவே சவாரி செய்கிறார் இளையராஜா
ரொம்ப எளிமையானவர் என்றெல்லாம் இளையராஜாவை பற்றி சொல்வார்கள்.ஆனால் அவருக்கு பணம் தான் முக்கியம் என்பது அவரோடு பணியாற்றியவர்களுக்கு தெரியும்.ஆரம்பத்தில் புது இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்காமல் இருந்தவர் காலப்போக்கில் வருகிற புது இயக்குனர்,புது கம்பெனி படங்களை சகட்டுமேனிக்கு ஒப்புக் கொண்டார்.அட்வான்ஸ் 5 லட்சத்திற்கு குறைவாக வாங்க மாட்டார்.அவர் அப்படி அட்வான்ஸ் வாங்கி பாதியில் நின்றுபோன படங்கள் முப்பதைத் தாண்டும் என்கிறார்கள்.[கணக்கு போட்டு பாருங்கள்] அட்வான்ஸ் வாங்கியதை ஒருபோதும் திருப்பி கொடுக்கமாட்டார்.'ரெடி பண்ணிட்டு வாங்க நான் பண்றேன்' என்பாராம்.
அதேபோல் அவர் வேலை செய்யும் எந்த பட பிரஸ் மீட்டுக்கும் வரமாட்டார்.ஏன்., அவர் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கே வர மாட்டார்.போனாபோகுது என்று ஒன்றிரண்டு பெரிய கம்பெனி ,பெரிய டைரக்டர் பட விழாவுக்கு மட்டுமே வருவார்.
சமிபத்தில் அவர் இசையமைத்த அழகர்சாமியின் குதிரை இசை விழாவுக்கு வந்தார்.பிரஸ் மீட்டுக்கும் வந்தார்.
மைக் பிடித்து பேச ஆரம்பித்தவர்,"குப்பைகளைத்தான் இங்கே கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.அழகர்சாமியின் குதிரை போன்ற படங்கள்தான் உள்ளுக்குள் இருந்து இசையை ஊறச் செய்யும்." என்று பேசியவர்,இடையிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றி சினிமாவையும்,ஆன்மிகத்தையும் போட்டு கிளறினார்.இளையராஜா பேசி அமர்ந்ததும் ஒரு மூத்த பத்திரிகையாளர் எழுந்து 'தமிழ்நாட்டில் நடக்கிற ஒரு கதைக்கு இசையமைக்க ஹங்கேரி வாத்தியக் கலைஞர்களை அழைத்து வர என்ன காரணம்?' என்று கேட்டார்.
இந்த கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லவேண்டிய இளையராஜா கடும்கோபமாகி 'இந்த கேள்விக்கு நான் பதில் சொல்ல தயார்.அனால் அதை புரிந்துகொள்ளும் இசை ஞானம் உங்களிடம் இருக்கிறதா? என்று ஒரே போடாக போட்டார்.பத்திரிகையாளர் விக்கித்துப் போனார்.
.. டிரஸ் போடுறவங்க எல்லோருக்கும் டைலரிங் தெரிந்த்திருக்கவேண்டும் அந்த டிரசின் பூர்விகம் தெரிந்த்திருக்கவேண்டும் என்று சொல்ல வருகிறாரா?சாப்பிட தெரிந்தவங்களுக்கு சமையல் தெரிந்த்திருக்கவேண்டும் என்று சொல்ல வருகிறாரா? டேஸ்ட் தெரித்தால் போதுமே சார்..
"இந்த படத்தின் இசையை கேட்கும்போது மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அப்படி வரவில்லையென்றால் நான் இனி இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்" என்றார். அவர் கூற்றுப்படி இசை ஞானம் இருந்தா தானே கண்ணீர் வரணும்.?
இளையராஜா ஏன் இப்படி உளறிக் கொட்டினார் என்று துருவினால் படத்தின் தயாரிப்பாளர் மதனுக்கு செமத்தியான பில்லை தீட்டி விட்டாராம். இசையமைக்க ஒரு பில், ஹங்கேரி வாத்தியக் கலைஞர்களுக்கு செமத்தியான மற்றொரு பில்,இசை வெளியீடு ,பிரஸ் மீட்டில் கலந்துகொள்ள ஒரு பில் என பில்களை போட்டு தாளித்து விட்டாராம்.நொந்துபோய் சொல்கிறார்கள் அழகர்சாமியின் குதிரை வட்டாரத்தில்..
நல்லாவே சவாரி செய்கிறார் இளையராஜா.

No comments:
Post a Comment