Saturday, April 23, 2011

வடிவேலு பீஸ்போன பல்பு
                -புவனேஸ்வரி

 வடிவேலு ஒரு டம்மிபீஸ், பீஸ்போன பல்பு என்று நடிகை புவனேஸ்வரி கடுமையாக தாக்கி பேசினார் 
  திருச்சுழியில் அதிமுக கூட்டணி கட்சியான மூவேந்தர் முன்னணி கழக வேட்பாளர் இசக்கிமுத்துவை ஆதரித்து  மகளிரணி செயலாளர் நடிகை புவனேஸ்வரி பிரச்சாரம் செய்தார். காரியாபட்டி ஒன்றியத்தில் வக்கனாங்குண்டு,கரியனேந்தல், தோணுகால், தண்டியேந்தல், பிசிண்டி, மல்லாங்கிணறு, வளையங்குளம், கல்குறிச்சி, காரியாப்பட்டி, நரிக்குடி ஒன்றியம் வீரசோழன்,நரிக்குடி, கட்டனூர் மற்றும் இருஞ்சிறை ஆகிய இடங்களில் நடிகை புவனேஸ்வரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்கிறார். இந்த காமெடி பீஸ் மொத்தத்தில் டம்மி பீஸ், பீஸ்போன பல்பு. கட்சியில் உறுப்பினராக  சேராமல் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏன் திமுகவில் தைரியமாக உறுப்பினராக சேரவேண்டியதுதானே. அதுக்கு தில் வேணும்.
   ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த கூட்டம் கருணாநிதி கூட்டம். அதுக்கு எத்தனை சைபர் போடவேண்டும் என்று யோசித்து போடணும். இந்த கூட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசுகிறார். அந்த குஷ்பு தமிழ்நாட்டு பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார். தமிழ்நாட்டு பெண்கள் குஷ்புவை ஊருக்குள் விடக்கூடாது.  அராஜக ஊழலாட்சி, குடும்ப ஆட்சியை விரட்டுங்கள் என்றார். பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் எம்பி பொ.அன்பழகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்பலம், காரியாபட்டி ஒன்றிய செயலாளர் ராஜராஜன், தொகுதி பொறுப்பாளர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment