ஆர்யாவின் அடாவடித்தனம்
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் 'இந்திய அணி ஜெயிக்காது என்று நினைக்கிறேன். பாகிஸ்தான் அணி வெற்றி பெறும்' என்று நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்திருந்தார்.
"பாகிஸ்தான் அணி சிறந்த அணியாக உள்ளது. இந்த உலக கோப்பை போட்டியில் அவர்கள் நிறைய ரன் எடுத்துள்ளனர். ஷாயித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு வெற்றி தேடித் தருவார். இந்திய அணியில் கவுதம் காம்பீர் சிறந்த ஆட்டக்காரராக இருக்கிறார் என்று ஆர்யா கூறியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடிகர் ஆர்யா சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏற்கனவே மலையாள நடிகர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் நடிகர்களுக்கு எதிராகவும் பேசி கண்டனத்துக்கு உள்ளானார்.
இப்போது பாகிஸ்தான் அணி ஜெயிக்கும் என்று கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிதான் தற்போது வலுவாக உள்ளது. ஒருவேளை இந்தியா வலுவிழந்த அணியாக இருந்தாலும் இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்திப்பார்கள்.
அரை இறுதிபோட்டியில் இந்திய அணி வெற்றி பெற நாடுமுழுவதும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் நடந்து வருகின்றன. இந்து முன்னணி சகோதரர்கள் இணைந்து இந்திய அணி வெற்றிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றார்கள்.
மதங்களை கடந்து இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியன் இதயமும் துடிக்கிறது. இந்த நிலையில் பாகிஸ் தான் அணி ஜெயிக்கும் என ஆர்யா அந்த அணிக்கு வக்காளத்து வாங்குவது இளைஞர்கள் மனதை புண்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அணி வலுவாக இல்லை. ஏற்கனவே சூதாட்டத்திலும், போதை மருந்து வழக்குகளிலும் சிக்கி பல சிறந்த வீரர்கள் வெளியேற்றப்பட்டு அந்த அணி சின்னா பின்னமாகி கிடக்கிறது. அந்த அணிக்கு ஆதரவாக ஆர்யா சொன்ன கருத்தை வாபஸ் பெற வேண்டும்."
-இவ்வாறு அறிக்கையில் குறிபபிட்டிருந்தார்.
இதை ஆர்யாவும் கண்டுகொள்ளவில்லை.இந்து மக்கள் ,கட்சியும் மறந்துவிட்டது....
எது எப்படியோ இந்தியா கோப்பை வாங்கியதில் எல்லோருக்கோம் சந்தோசம்.

No comments:
Post a Comment