அந்த நினைப்போடு படம் பார்க்க வேண்டாம்...
தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம்வந்த நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள், ஒரு பையனும் உள்ளனர். இதில் மூத்தப்பெண் கார்த்திகா இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘கோ’ படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், தன் மகளை பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் ராதா.
பத்திரிகையாளர்களிடம் கார்த்திகா அளித்த பேட்டியில், “என் அம்மாவும், பெரியம்மா அம்பிகாவும் தமிழ் பட உலகில் மிகப்பெரிய கதாநாயகிகளாக இருந்தவர்கள். இருவரும் ஜாம்பவான்கள். இரண்டு பேரும் சிவாஜிகணேசன், கமல்ஹாசன் போன்ற இமயங்களுடன் நடித்தவர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிட முடியாது.
`கோ படத்தை தியேட்டரில் பார்க்கும்போது என்னை ஒரு சாதாரண புதுமுகமாக நினைத்துக்கொள்ளுங்கள். ராதா மகள் என்ற நினைப்போடு படம் பார்க்க வேண்டாம். நான், கவர்ச்சிக்கு எதிரானவள் அல்ல. ஒரு நடிகைக்கு கவர்ச்சி அவசியம். கவர்ச்சி இல்லையென்றால், சினிமாவில் நீடிக்க முடியாது. புடவை கட்டுவதில் கூட கவர்ச்சி இருக்கிறது.
நடிகை ராதா கூறியதாவது; “நான் நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் என் மகள் கார்த்திகாவுக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறேன். எல்லோருடனும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும். தொழில் சொல்லிக்கொடுத்த குருவை வணங்க வேண்டும். யாருடனும் நம்மை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. நான் நடிக்க வரும்போது, சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் வந்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. நிறைய படித்த பெண்கள் வருகிறார்கள். சினிமாவை பற்றியும், அதன் பின்புலம் பற்றியும் நன்றாக தெரிந்துகொண்டு வருகிறார்கள்.

படத்தின் கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் தேவை என்றால் நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல. முத்தக்காட்சியில் நடிப்பதும் தப்பு அல்ல.அதேநேரத்தில், நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.
நடிகை ராதா கூறியதாவது; “நான் நூற்றைம்பது படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் என் மகள் கார்த்திகாவுக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறேன். எல்லோருடனும் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். தொழிலை கடவுளாக மதிக்க வேண்டும். தொழில் சொல்லிக்கொடுத்த குருவை வணங்க வேண்டும். யாருடனும் நம்மை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. நான் நடிக்க வரும்போது, சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் வந்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. நிறைய படித்த பெண்கள் வருகிறார்கள். சினிமாவை பற்றியும், அதன் பின்புலம் பற்றியும் நன்றாக தெரிந்துகொண்டு வருகிறார்கள்.
நான் அலைகள் ஓய்வதில்லை,டிக்..டிக்..டிக்..படங்களில் நீச்சலுடையில் நடித்துள்ளேன்.என் மகளும் நடிப்பால். அதில் ஒன்றும் தப்பில்லை.நீச்சல் குளத்தில் புடவை கட்டிக்கொண்டு குளிக்கமுடியாது.கவர்ச்சி கதைக்கு அவசியமாக இருக்கவேண்டும்.ஆபாசமாக இருக்கக்கூடாது.என்றார்.
No comments:
Post a Comment