Monday, December 19, 2011

தமிழன் கண்ணுக்கு தெரியவில்லையா?-விஜய்யை சாடும் பாரதிராஜா

விஜயை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-
'கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?'
பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை? இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் விஜய்.
 

Wednesday, November 30, 2011

சத்யானந்தா பட நடிகைக்கு நடிப்பு சொல்லி கொடுத்த ரஞ்சிதா.!

நித்யானந்தா -ரஞ்சிதா விவகாராத்தை 'சத்யானந்தா 'என்ற பெயரில் படமெடுத்துள்ளார்  பா.ஜ.க.பிரமுகர் மதன் பட்டேல்.கன்னடத்தில் எடுத்துள்ள இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடபோகிறார்.படம் முடிவடையும் தருவாயில் கர்னாடக நீதி மன்றத்தில் படத்தை வெளியிடக்கூடாது என்றும் இது தனது பெயரையும் புகழையும் சீர்குலைவு செய்யும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும் வழக்கு தொடர்ந்திருக்கிறார் நித்யானந்தா.
 "இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால் இந்து மத கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், சோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என் கடமை. அதைதான் 'சத்யானந்தா'வில் செய்திருக்கிறேன். இதை வெளியிட கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன்" என்கிறார் மதன் பட்டேல்.
நித்யானந்தா மாதிரியே ஒரு ஆளை செலக்ட் பண்ணி அவரது கெட்-அப்பில் நடிக்கவைத்துவிட்டு சாமியார்களை  தான் சாடுகிறேன் என்று சொன்னால் எப்படி? என்றும் சிலர்கேல்வி எழுப்புகின்றனர்.
சரி அதை விடுங்கள்..அடுத்த காமெடியை படியுங்கள்,
படத்தில் ரஞ்சிதாவாக நடிப்பவர் அணுகி என்ற இளம்பெண்.அவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார்.அதில்,"படத்தில் முதலில் ரஞ்சிதாதான் நடிக்கிறதா இருந்திச்சு. அப்புறம் என்ன காரணத்தாலோ நடிக்கல. அவர் எனக்கு பெஸ்ட் பிரண்ட். இந்த படத்தில் நான் நடிக்கிறேன்னு தெரிஞ்சதும் அவங்க எனக்கு மெசேஜ் அனுப்பி வாழ்த்து சொன்னாங்க. எப்படி நடிக்கணும். பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க" என்று கூறியிருக்கிறார்.
ஒரு புறம் இந்த படம் வெளியில் வரவே கூடாது. தடை செய்ய வேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறார் நித்யானந்தா. ஆனால், இன்னொரு பக்கம் ரஞ்சிதாதான் எனக்கு நடிப்பே சொல்லிக் கொடுத்தார் என்கிறார் அப்படத்தின் நாயகி அணுகி. காமெடியா இல்ல.?
தன்னைப் பற்றி தப்பா சொல்ற படத்தில் ரஞ்சிதா எப்படி நடிக்கிறதா இருந்திருப்பார்? பாடிலாங்குவேஜ் எப்படி இருக்கணும் என்றெல்லாம் சொல்லி கொடுத்தாராமே? அது என்ன பாடிலாங்குவேஜ்? ரஞ்சிதாவின் பெஸ்ட் பிரண்ட் (?) நடிகை அணுகிக்கே வெளிச்சம்.!

கதாநாயகியான சின்னப்பெண்

'கோவலனின் காதலி' படத்தில் சின்ன பெண் கிரண்மை கதாநாயகியாக நடிக்கிறார்.அவரது கவர்ச்சிப் படங்கள் இங்கே: கதாநாயகனாக திலீப்குமார் நடித்துள்ளார்.






             
             

அனுஷ்காவின் அழகு ரகசியம்


 'ரெண்டு' படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “அருந்ததீ” படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதுதவிர நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அழகிற்கான ரகசியத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்த அனுஷ்கா கூறியதாவது, நான் அழகாக இருப்பதாகவும், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் நிறைய பேர் கேட்கின்றனர். அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை. முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும்.
ஆரோக்கியத்துக்காக தினமும் காலையில் யோகா செய்கிறேன். அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது. இவைதான் எனது அழகு ரகசியங்கள் என்கிறார்.

அஜீத்தின் அடுத்த படம்


தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. 'ஏகன்', 'அசல்' என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் 'மங்காத்தா' வெற்றி பெற்றதை அடுத்து , அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.
ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!
இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.
செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.
இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்,” என்றார்.


ஜப்பானிய கலைஞர்களுடன் ஆடி பாடிய விஜய் ஆண்டனி



ப்பானில் சில மாதங்களுக்கு முன் சுனாமி பேரலைகள் ஏற்பட்டு லட்சக்கணக்கான ஜப்பானியர்கள் வீடுகளையும்,உடமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.இவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எஸ்தெல் ரிசார்ட் மற்றும் பிரிட்டோஸ் அகடமி (Esthell resorts and Brittos academy) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தனது பங்களிப்பை அளித்தார்ஜப்பானில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் சதா (Chadha) பவுண்டேஷன் வழங்கிய என்கா (Enka)என்ற ஜப்பானிய இசை நிகழ்ச்சியில் ஜப்பானிய இசைக்கலைஞர்கள் பலர் பாடினர்ஜப்பான் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பேஷன் ஷோ நிகழ்ச்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விஜய் ஆண்டனிஜப்பானிய இசைக்கு ஏற்றவாறு தனது ‘நாக்க முக்க..’ பாடலை பாடியபடி ஆடபார்வையாளர்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்விஜய் ஆண்டனியுடன் இணைந்து  பாடகிகள் வினயாமதுமிதா,சாருலதா மணி, நிர்மலாசங்கீதா ராஜேஸ்வரன், ஜனனிநடிகர் விஜய்யின் தாயாரும் தமிழ்நாடு இசை பள்ளிகளின் அறிவுரைஞருமான  திருமதி ஷோபா சந்திரசேகர்,பாடகர் பிரசன்னா ஆகியோரும் இணைந்து பாடி பரவசப்படுத்தினர்.
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும்,இயக்குனருமான எஸ்..சந்திரசேகரனும் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டுசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 ரூபாய் நிதியாக வழங்கினார்அவர் பேசும்போது, “ஒரு நல்ல நோக்கத்திற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறதுஇதனை ஏற்பாடு செய்தவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்இங்கே எனது நண்பர் விஜய் ஆண்டனியும் கலந்துகொண்டு பாடியதில்மகிழ்ச்சியடைகிறேன்இங்கு பாடப்பட்ட ஜப்பானிய பாடல்களிலிருந்து விஜய் ஆண்டனி இந்நேரம் பல பல்லவிகளை உருவாக்கி இருப்பார்அதனை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தருவதில் விஜய் ஆண்டனி கெட்டிக்காரர்.அதேபோல இந்தியாவில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்திஅற்புதமாக பாடிய சதா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்என்றார்.



Monday, November 21, 2011

இனி ஜெய்யுடன் நடிக்கவே மாட்டேன்.! -அஞ்சலி

'அங்காடித் தெரு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகிகள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் நடிகை அஞ்சலி.இவர் நடித்து வெளிவந்த 'எங்கேயும் எப்போதும் 'படம்  மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இப்  படத்தில் நடிகர் ஜெய்க்கு கதாநாயகியாக அஞ்சலி நடித்திருந்தார். இதனால் இவர்கள் இருவருக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.
இந்த செய்தியை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அஞ்சலி கூறியதாவது, "அங்காடி தெரு' மூலம் எனக்கொரு அங்கீகாரத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
வாழ்க்கையில் வெற்றிபெற போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன்.
இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன்( ஜெய் ) இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்கு பிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து சில படங்களை தவிர்த்தேன்.இதை தொடருவேன்.நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை. இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்." என்றார்.
(இந்த கிசுகிசு வர காரணமே அந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் போதும் சரி, படம் வெளிவந்தபோதும் சரி இருவரும் நெருக்கமாக பழகியது தான். 'ஏழாம் அறிவு 'பட ஆடியோ பங்ஷனில் இருவரும் நடந்து கொண்டவிதம் ஒன்று போதாதா..?)

Thursday, November 3, 2011

இதுதான் எனக்கு முதல் அனுபவம். -நடிகை பூனம் கவுர்

 விஇசட் துரை இயக்கத்தில் ஷாம்,பூனம் கவுர் நடிக்கும் படம் '6 '.
 இந்தப்  படத்துக்காக  வொர்க்ஷாப்பை சென்னையில் நடத்தினர். படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், நகரியில் நடக்கவிருக்கும் முக்கியமான  படப்பிடிப்புக்காகத்தான் இந்த 10 நாட்கள்  ஒத்திகை நடந்தது.இதில் ஹீரோ ஷாம், நாயகி பூனம் கவுர், படத்தில் முக்கிய வேடத்தில் வரும் குழந்தை உள்பட அனைவரும் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர்.
                 
                               ஒத்திகை அனுபவம் குறித்து நாயகி பூனம் கவுர் கூறுகையில், "ரிகர்சல் பார்த்துவிட்டு ஷூட்டிங் போவது இதுதான் எனக்கு முதல் அனுபவம்.
உண்மையிலேயே மிகவும பயனுள்ளதாக இருந்தது. இது வேறு உலகத்தைக் காட்டுவதாக இருந்தது. ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட கஷ்டமான காட்சியாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது,. இனி ஷாட் போகும்போது, ஒளிப்பதிவாளரின் வேலை மட்டும்தான் பாக்கி. செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக நாங்கள் இருப்பதால் குறைந்தபட்ச நேரத்தில் குறித்த தேதிக்குள் வேலை முடிந்துவிடும்,"" என்றார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.
6 வருடம், 6 மாதம், 6 வாரம், 6 நாட்கள், 6 மணி நேரம், 6 நிமிடம், 6 நொடிகளில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

                       

Wednesday, October 19, 2011

நடிகை அஞ்சலியாக நடிக்கும் சோனியா

' நடிகையின் வாக்குமூலம்' என்ற படத்தில் சோனியா அகர்வால் நடித்து வருவது தெரிந்ததே.நடிகையின் திரை வாழ்க்கையை மட்டுமல்ல,திரைக்கு பின்னால் உள்ள வாழ்க்கையையும் சொல்கிறது இந்தப்படம்.அஞ்சலி என்ற நடிகையாக நடித்து வருகிறார் சோனியா.ஏற்கனவே அஞ்சலி என்ற பெயரில் இங்கு ஒரு நடிகை இருக்கிறார்.அவரது கதை தானா இது என்றால்,  "பெயர்மட்டும் தான் அஞ்சலி.அவர் கதை என்று சொல்ல முடியாது, எல்லா நடிகையின் வாழ்க்கையில் நடந்த-நடக்கிற கதை தான் "என்கிறார் டைரக்டர். 
மலேசியா ஆர்.ஜே.யும் ,தமிழ் பட தயாரிப்பாளருமான புன்னகை பூ கீதா இந்தப் படத்தை வாங்கியதோடு பத்திரிகை நிருபராகவும் நடிக்கிறார்.
    சோனியாவின் லேட்டஸ் படங்கள் [ நடிகையின் வாக்குமூலம்} 





                                                    

Wednesday, October 12, 2011

ஒரே கதையை காப்பியடித்த இயக்குநர்கள்


லகப்படங்களின் கருவை உருவி, வித்தியாசமான கதை சார் இது என கதை விடும் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆமா சார் காப்பிதான் அடித்தேன் என நேர்மையாக நெஞ்சு நிமிர்த்தும் ஆட்கள் ஒருவரும் இல்லை 
              
ஒரே கதையையே ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் காப்பி அடிப்பது அதைவிட கொடுமை. ஒரு வருடத்திற்கு முன்பு ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்படத்திற்காக விஜய் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதே மாதிரி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. என உலக சினிமா ரசிகர்கள் யோசித்தபோதுதான். வேலாயுதம் Assassins Creed என்ற வீடியோ கேம் படத்தின் காப்பி என்பது புரிந்தது.
         
ஆனால் ராஜா கொடுத்த சில பேட்டிகளில், காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆசாத் தெலுங்கு படத்தின் கதையே வேலாயுதம் என்றார். படம் வந்த பிறகே உண்மை தெரியும் என்ற நிலையில், மிஷ்கின் தனது முகமூடி திரைக்கதையை அவசரஅவசரமாக மாற்றியுள்ளார் என்கிறார்கள். வேலாயுதமும், முகமூடியும் ஒரே கதை அதாவது Assassins Creed படத்தின் காப்பி என்பதுதான் காரணம்.
ஸ்கிரிப்ட் ரெடி சார் என தயாரிப்பாளரிடம் ஃபைலை நீட்டிய வேகத்திலேயே திருப்பி வாங்கிய மிஷ்கின், இப்போது மாற்றி எழுதியுள்ளாராம்..
    
 *    உங்க ரெண்டு பேருக்கும் டீ பிடிக்காதாமே ..'காப்பி' தான் பிடிக்குமா? 

*     காப்பி அடிக்கிற பழக்கம் சினிமாவுக்கு வந்த பிறகா? இல்ல, ஸ்கூல்ல  படிக்கும் போதே இருந்தா..?

*       உருவுறது எப்படின்னு ஒரு புத்தகம் எழுதுங்கள் .அசிஸ்டென்ட் டைரக்டர் களுக்கு யூஸ் ஆகும்.



      

Wednesday, September 14, 2011

சா‌தாரண இளைஞன்எப்படி தலைவன் ஆகிறான்?

ஸ்கார் பிலிம்ஸ்  ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம்,  வேலாயுதம். விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை  ஜெ‌யம்‌ ராஜா இயக்கி வருகி‌றா‌ர்‌
இந்‌தப்‌ படம்‌ பற்‌றி‌ இயக்‌குநர்‌ ரா‌ஜா‌ கூறுகை‌யி‌ல்‌, “சா‌தாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு.
ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது.
ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது..” என்‌று தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌.
                             
                      மோப்பம் பிடிப்பதில் நம் ஹீரோக்கள் கில்லாடிகள்.
            ஹன்ஷிகாவின் வாசனை விஜய்க்கு ரொம்பவே பிடித்துள்ளதாம்.