ஆஸ்கார் பிலிம்ஸ் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம், வேலாயுதம். விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார்
இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜா கூறுகையில், “சாதாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு.
ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது.
ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது..” என்று தெரிவித்தார்.
மோப்பம் பிடிப்பதில் நம் ஹீரோக்கள் கில்லாடிகள்.
ஹன்ஷிகாவின் வாசனை விஜய்க்கு ரொம்பவே பிடித்துள்ளதாம்.
No comments:
Post a Comment