Wednesday, November 30, 2011

அனுஷ்காவின் அழகு ரகசியம்


 'ரெண்டு' படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, “அருந்ததீ” படம் மூலம் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இதுதவிர நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது அழகிற்கான ரகசியத்தை கூறியிருக்கிறார்.
இதுகுறித்த அனுஷ்கா கூறியதாவது, நான் அழகாக இருப்பதாகவும், உங்கள் அழகின் ரகசியம் என்ன என்றும் நிறைய பேர் கேட்கின்றனர். அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை. முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும்.
ஆரோக்கியத்துக்காக தினமும் காலையில் யோகா செய்கிறேன். அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது. இவைதான் எனது அழகு ரகசியங்கள் என்கிறார்.

No comments:

Post a Comment