Wednesday, October 12, 2011

ஒரே கதையை காப்பியடித்த இயக்குநர்கள்


லகப்படங்களின் கருவை உருவி, வித்தியாசமான கதை சார் இது என கதை விடும் இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆமா சார் காப்பிதான் அடித்தேன் என நேர்மையாக நெஞ்சு நிமிர்த்தும் ஆட்கள் ஒருவரும் இல்லை 
              
ஒரே கதையையே ஒன்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் காப்பி அடிப்பது அதைவிட கொடுமை. ஒரு வருடத்திற்கு முன்பு ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வேலாயுதம் ஆரம்பிக்கப்பட்டபோது அப்படத்திற்காக விஜய் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. இதே மாதிரி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே.. என உலக சினிமா ரசிகர்கள் யோசித்தபோதுதான். வேலாயுதம் Assassins Creed என்ற வீடியோ கேம் படத்தின் காப்பி என்பது புரிந்தது.
         
ஆனால் ராஜா கொடுத்த சில பேட்டிகளில், காசு கொடுத்து வாங்கப்பட்ட ஆசாத் தெலுங்கு படத்தின் கதையே வேலாயுதம் என்றார். படம் வந்த பிறகே உண்மை தெரியும் என்ற நிலையில், மிஷ்கின் தனது முகமூடி திரைக்கதையை அவசரஅவசரமாக மாற்றியுள்ளார் என்கிறார்கள். வேலாயுதமும், முகமூடியும் ஒரே கதை அதாவது Assassins Creed படத்தின் காப்பி என்பதுதான் காரணம்.
ஸ்கிரிப்ட் ரெடி சார் என தயாரிப்பாளரிடம் ஃபைலை நீட்டிய வேகத்திலேயே திருப்பி வாங்கிய மிஷ்கின், இப்போது மாற்றி எழுதியுள்ளாராம்..
    
 *    உங்க ரெண்டு பேருக்கும் டீ பிடிக்காதாமே ..'காப்பி' தான் பிடிக்குமா? 

*     காப்பி அடிக்கிற பழக்கம் சினிமாவுக்கு வந்த பிறகா? இல்ல, ஸ்கூல்ல  படிக்கும் போதே இருந்தா..?

*       உருவுறது எப்படின்னு ஒரு புத்தகம் எழுதுங்கள் .அசிஸ்டென்ட் டைரக்டர் களுக்கு யூஸ் ஆகும்.



      

No comments:

Post a Comment