விஇசட் துரை இயக்கத்தில் ஷாம்,பூனம் கவுர் நடிக்கும் படம் '6 '.
இந்தப் படத்துக்காக வொர்க்ஷாப்பை சென்னையில் நடத்தினர். படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், நகரியில் நடக்கவிருக்கும் முக்கியமான படப்பிடிப்புக்காகத்தான் இந்த 10 நாட்கள் ஒத்திகை நடந்தது.இதில் ஹீரோ ஷாம், நாயகி பூனம் கவுர், படத்தில் முக்கிய வேடத்தில் வரும் குழந்தை உள்பட அனைவரும் பங்கேற்று ஒத்திகை பார்த்தனர்.ஒத்திகை அனுபவம் குறித்து நாயகி பூனம் கவுர் கூறுகையில், "ரிகர்சல் பார்த்துவிட்டு ஷூட்டிங் போவது இதுதான் எனக்கு முதல் அனுபவம். உண்மையிலேயே மிகவும பயனுள்ளதாக இருந்தது. இது வேறு உலகத்தைக் காட்டுவதாக இருந்தது. ஷூட்டிங்கில் எப்படிப்பட்ட கஷ்டமான காட்சியாக இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல் நடிக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது,. இனி ஷாட் போகும்போது, ஒளிப்பதிவாளரின் வேலை மட்டும்தான் பாக்கி. செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவாக நாங்கள் இருப்பதால் குறைந்தபட்ச நேரத்தில் குறித்த தேதிக்குள் வேலை முடிந்துவிடும்,"" என்றார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வசனத்தை ஜெயமோகன் எழுதுகிறார்.
6 வருடம், 6 மாதம், 6 வாரம், 6 நாட்கள், 6 மணி நேரம், 6 நிமிடம், 6 நொடிகளில் நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment