Wednesday, November 30, 2011

அஜீத்தின் அடுத்த படம்


தொடர்ந்து தோல்விகள் கொடுத்தாலும் துவளாத மார்க்கெட் அஜீத்துக்கு. 'ஏகன்', 'அசல்' என தொடர் தோல்விகள் கொடுத்த பிறகும் கூட அவரை இயக்க இயக்குநர்கள் மத்தியில் பெரும் போட்டி இருந்தது. இந்த நிலையில் 'மங்காத்தா' வெற்றி பெற்றதை அடுத்து , அஜீத்தின் வழக்கமான இயக்குநர்கள் தவிர, வேறு சிலரும் பக்கா ஸ்கிரிப்டோடு அஜீத்தின் அப்பாயின்ட்மெண்டுக்கு காத்திருக்கிறார்களாம்.
ஆனால் அஜீத்தின் இப்போதைய சாய்ஸ் மூன்று பேர். அவரது ஆஸ்தான இயக்குநர் எனப்படும் விஷ்ணு வர்தன், ஆஸ்தான இயக்குநர் பட்டியலில் புதிதாக சேர்ந்திருக்கும் வெங்கட் பிரபு, கிரீடம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ எல் விஜய்!
இந்த மூவருக்குமே அடுத்தடுத்து படம் செய்ய விருப்பம் உள்ளதாக நேற்று முன்தினம் ஒரு ஆங்கில தினசரிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குவார் என்றும் முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விசேஷம், அஜீத்தின் தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்கிற சிம்பு முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதுதானாம்.
பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏஎம் ரத்னத்துடன் இணைந்து மும்பை கார்ப்பொரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்கிறதாம்.
செய்தியை உறுதிப்படுத்துவது போல, இத்தனை நாள் சோம்பிக் கிடந்த ஏஎம் ரத்னத்தின் சூர்யா மூவீஸ் அலுவலகம் மகா சுறுசுறுப்படைந்துள்ளதாம்.
இதுகுறித்து விசாரிக்க ஏஎம் ரத்னத்தை நாம் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “எதுபற்றியும் இப்போது பேசுவது சரியாக இருக்காது. பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியானதும் பின்னர் பேசுகிறேன். ஆனால் ஒன்று, இத்தனை நாளும் அமைதியாக இருந்ததற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சூர்யா மூவீஸ் பேனரில் படங்கள் இனி வரும்,” என்றார்.


No comments:

Post a Comment