Sunday, August 19, 2012

க்ரைம் திரில்லர் படம் 'அகடம்'

ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படமாக உருவாகும் க்ரைம் திரில்லர் படம் 'அகடம்'. 'லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தயாரிக்கும் இப்படம் திடுக்கிடும் சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும், மர்ம முடிச்சுகளையும் கொண்ட க்ரைம் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.

இதில் தமிழ், ஸ்ரீநி அய்யர் ஆகிய இரண்டு புதுமுகங்கள் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். ஹீரோயின்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
 இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசாக் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றியிருக்கும் இவர், பல பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, கே.துரைராஜ் படத்தொகுப்பு செய்கிறார். பவன் இசையமைக்கிறார். பூங்கா கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இம்மாதம் இறுதியில் சென்னையில் தொடங்க இருக்கும் 'அகடம்' படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து ஒரே ஷெட்யூலில் முடிக்க இயக்குநர் இசாக் திட்டமிட்டிருக்கிறார்.

தொழில்நுட்பத்திலும், படமாக்கும் விதத்திலும் ஆங்கிலப் படங்களுக்கு நிகரான க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் 'அகடம்' படத்தினை வரும் நவம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment