Monday, August 20, 2012

என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன்- ரஜினிகாந்த்


AVMநிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் சிவாஜி. ஷங்கர் இயக்கினார். ஏ.ஆர்.ரகுமான் ஏவிஎம் இசை. 5 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தை 3டி யில் மாற்றம் செய்திருக்கின்றனர். இதன் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல் காட்சிகள்  பத்திரிகை நிருபர்களுக்கு  திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, 'சிவாஜி 3டி' படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- சிவாஜி படம் 3டியில் உருவாகியிருப்பது பற்றி
உங்கள் கருத்து என்ன?                                             

பதில்:- ஆண்டவன் எப்போதும் என் கூடவே இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். என் ரசிகர்களுக்கு என்ன திருப்பிக் கொடுக்கப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஏவி.எம். நிறுவனம் 'சிவாஜி' படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.
 
'கோச்சடையான்' படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். உங்களுக்கே (நிருபர்களுக்கே) இந்த படம் பிடித்து இருக்கிறது. என் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

கேள்வி:- அடுத்ததாக எந்த படத்தை 3டி படமாக உருவாக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- எந்திரன், படையப்பா போன்ற பிரமாண்டமான படங்களை 3டியில் கொண்டு வரலாம். இனிமேல் செய்கிற படங்கள் தொழில்நுட்பத்தில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப கதைகளை உருவாக்க வேண்டும். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கி விட்டது.

கேள்வி:- கறுப்பு-வெள்ளை பட காலத்திலும் இருந்தீர்கள். கலர் பட காலத்திலும் இருந்தீர்கள். இப்போது 3டி பட காலத்திலும் இருக்கிறீர்கள். இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- நான் அதிர்ஷ்டசாலி. எதையும் நான் சாஸ்தி பிளான்' பண்ணி செய்வதில்லை. எல்லாமே ஆண்டவன் அருளால் நடக்கிறது. கடவுளுக்கு நன்றி.''

'சிவாஜி 3டி' படம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் ஓடும் வகையில், படத்தின் நீளம் குறைக்கப்பட்டிருப்பதாக பட அதிபர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்தார். 

No comments:

Post a Comment