Friday, June 17, 2011

காதலன் பெயரை பச்சைக் குத்திய நடிகை

தனது காதலன் ரபேலின் பெயரை ஹிப்ரூ மொழியில், தன்னுடைய முதுகில் பச்சை குத்திக் கொண்டு உள்ளார் குத்து ரம்யா அலைஸ் திவ்யா ஸ்பந்தனாஸ். குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கும், ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் ரபேலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினர். பலகாலமாக இவர்களுக்குள் இருந்த இந்த காதல் சமீபத்தில் தான் தெரியவந்தது. நடந்த முடிந்த ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரில் நடந்த போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். இந்நிலையில் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளேன். மிகவும் வித்யாசமாக, பழமையான மொழிகளில் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச்சைக்குத்தி கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர்த்தம். ஆகையால் ஹிப்ரூ மொழியில் புனிதம்(‌செயின்ட்) என்று பச்சை குத்திக்கொண்டேன். நான் இவ்வாறு பச்சைக்குத்தி கொண்டது, ரபேலுக்கு தெரியாது. பின்னர் இதுபற்றி அவரிடம் விளக்கி கூறினேன், அவர் நெகிழ்ந்து போனார். ஒவ்வொருவரும் தங்களது காதலை பல்வேறு முறையில் வெளிப்படுத்துவார்கள். நான் எனது காதலை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளேன். என் வாழ்வில் ரபேல் வந்தபிறகு தான் சந்தோஷம் அதிகமானது என்றார்.

No comments:

Post a Comment