Saturday, June 18, 2011

பத்திரிகை ஆசிரியரை மணந்த நடிகை

 பிரபல திரைப்பட நடிகை ஸ்வேதா மேனன்- ஸ்ரீவத்சன் மேனன் காதல் திருமணம், திருச்சூர் வளாஞ்சேரியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் தமிழில் 'சிநேகிதியே 'உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த மலையாளப்படம் ஒன்று தமிழில் 'தாரம் 'என்ற பெயரில் வெளிவந்ததது. இவரது நடிப்பில் 'ரதி நிர்வேதம்' என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைப் போடு போடுகிறது.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில், ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிவரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அதன்படி, இன்று, வளாஞ்சேரி வடக்கும்புறத்தில் உள்ள இந்திரா சதன் என்ற வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன .    காலை 11 மணிக்கு ஸ்ரீவத்சன் மேனன், நடிகை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகன் ஸ்ரீவத்சனும், நடிகை சுவேதா மேனனும், பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஸ்வேதா, யாருடன் திருமணம் என்பதை இரண்டு ஆண்டு கழித்துதான் முடிவு செய்வேன் என்று கூறி வந்ததார். இந்த நிலையில், இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment