Friday, June 3, 2011

ஹீரோவின் முகத்தை பார்த்து எடை போடக்கூடாது ! சரண்யா



கோலிவுட்டிலுள்ள ஹீரோயின்களுக்கு ஒரு வெற்றிப் படம் சரியாக அமைந்துவிட்டாலே அடுத்து பெரிய பெரிய ஹீரோக்களுடன்தான் ஜோடி சேருவேன் என்று அடம் பிடிப்பார்கள். அத்தகைய ஹீரோயின்களுக்கு மத்தியில் “கதைக்கேற்ற நாயகர்களோடும் நடிப்பேன்’ என்று களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் சரண்யா மோகனின் திறமையை மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும். கன்னக் குழியும், சின்ன விழியும் கொண்ட சரண்யாவிடம் “அழகர்சாமியின் குதிரை’ படம் அனுபவம் குறித்து கேட்டோம்.
"இந்தப் படம் எண்பதுகளில் நடக்கிற மாதிரியான கதைகளம்  என்னோட மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாமே எண்பதுகளில் இருக்கிற மாதிரிதான் இருக்கும். படம் முழுக்க சேலைதான், பிளவுஸ் கூட பார்த்தீங்கன்னா அந்த காலத்து மாடல்லதான் இருக்கும். தலையில ரிப்பன் எல்லாம் வெச்சுக்கிட்டு பக்கா கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்கேன். சுசீந்திரன் ஸôர் கூட எனக்கு இது இரண்டாவது படம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
குரங்கனி மலை  பக்கத்துலேயே இருக்கிற “மாட்டுப்பட்டி’ங்கிற இடத்துலதான் சூட்டிங்கிற்காக தங்கினோம். மலைப்பாங்கான இடம் அது. ஏற்ற இறக்கமாதான் இருக்கும். மாட்டுப்பட்டி வரைதான் வண்டி எல்லாம் போகும். அங்கிருந்து ஒரு மூணு கிலோ மீட்டர் தள்ளிதான் எங்க லோக்கேஷன் இருந்தது. அங்க வண்டி எல்லாம் போகாது. சைக்கிள் கூட போக முடியாதுன்னா பார்த்துக்குங்களேன்.
வெயிட் எதுவும் எடுத்துக்கிட்டு போகணும்னா குதிரை மீதுதான் எடுத்துக்கிட்டு போகணும். அந்த மாதிரியான இடத்துக்கு தினமும் ஒரு அரைமணி நேரம் நடந்துதான் போய் சேருவோம். அது போல க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது எல்லாம் பார்த்தீங்கன்னா திடீர்ன்னு பனி மேகம் வந்து மூடிக்கும். திடீர்னு மழை வந்திடும். திடீர்னு வெயில் அடிக்கும். அதனால மூணு நாள் படப்பிடிப்பு தள்ளிபோச்சு. அதுக்காகவே சரியான நேரத்துக்கு அந்த இடத்துக்குப் போய்விடுவோம்.
அந்த இடத்துல நாங்க தான் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அங்கு தங்குவதற்கு எந்தவித வசதியும் கிடையாது. படப்பிடிப்பு முடியும் வரை எல்லாரும் ஒண்ணா, ஒரே இடத்துலதான் தங்கினோம். அந்த இடத்துல மொத்தமே இருபத்தி எட்டு குடும்பம்தான் இருந்தது. அந்த மக்கள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. எங்களுக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்டாங்க!எங்க பார்க்கணும், எப்படி நிக்கணும்ங்கிறது எல்லாமே டைரக்டரோட  முடிவுதான். அவர் எப்படி நடிக்க சொன்னாரோ அப்படியே நடிச்சிருக்கேன் .
எல்லோரும் பெரிய ஹீரோக்களோடு ஜோடி சேர ஆசைப்படும்போது நீங் அப்புகுட்டிக்கு ஜோடியா நடிச்சிருக்கீங்களே?
"பொதுவா நான் ஒரு படம் கமிட் பண்ணும்போது, அந்தப் படத்தினுடைய கதையையும், அதில் என் கதாபாத்திரத்தையும் மட்டும்தான் பார்ப்பேன். அதில் யார் ஹீரோவா நடிக்கிறாங்கன்னு பார்க்க மாட்டேன். எனக்கு இந்தக் கதையை கேட்டதுமே ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த கதை மீதும், டைரக்டர் மீதும் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அப்புகுட்டியும் இந்த துறைக்கு புதுசு இல்ல. அவர் ஏற்கெனவே நடிச்சுகிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்தான். பொதுவாக நம்முடைய நிறம், அழகு, உருவம் எல்லாம் இறைவன் கொடுப்பதுதான். அதனால் எந்தப் படத்திலும் நாயகனின் முகத்தைப் பார்த்து எடை போட கூடாது.                           
         
அந்தப் படத்தின் கதையும், அவங்க நடிப்பையும் பார்த்துதான் எடை போடணும். அதுதான் சரி. அந்த விதத்துல அப்புகுட்டி ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. அவருடைய திறமை “அழகர்சாமியின் குதிரை’யில் நன்றாகவே  வெளிப்பட்டிருக்கிறது."
தெலுங்குக்கு  போனீங்களே. அங்கு வரவேற்பு எப்படியிருந்தது?
"தமிழில் நல்ல கதைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் எல்லாமே வந்து போகிற மாதிரியான கேரக்டர். எதுவுமே எனக்கு நம்பிக்கையளிக்கிற மாதிரியில்லை.
அதுவும் இல்லாமல் சிறந்த இயக்குநரின் படங்களிலோ அல்லது பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலோதான் நடிக்க ஆசைப்படுறேன். அந்த மாதிரியான வாய்ப்புகள் எதுவும் தமிழில் அமையவில்லை. அதனாலதான் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிட்டேன்.
அதுமட்டுமில்லாமல் போன வருடம் தெலுங்கு இண்டஸ்ட்ரி பக்கம் போய் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். “வெண்ணிலா கபடி குழு’ படம் தெலுங்கில் ரீ-மேக் பண்ணினாங்க, அதில் நான் நடிச்சிருந்தேன். அந்தப் படம் அங்கே எனக்கு பெரிய சக்ஸஸ் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அங்கே நான்கு படங்களில் நடித்துவிட்டேன்.எனக்கு பிடித்த சினிமா தமிழ் தான் தான்,அதில் தான் முயற்சி செய்கிறேன் : என்றார்.

No comments:

Post a Comment