Friday, June 17, 2011

தெலுங்கு நடிகருடன் நிச்சயதார்த்தமா?- மறுக்கும் அனுஷ்கா!

 அனுஷ்காவும், நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் காதலிப்பதாக செய்தி வெளியானது. நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் இளம் ஹீரோவாக உள்ளார். இவருடன் பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா “சோஷத்” என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

அனுஷ்காவுக்கும், நாகசைதன்யாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். "நானும் நாகசைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தி பொய்யானது. நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாகசைதன்யா அறிமுகம் ஆனார்.

அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாக சைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

தற்போது படப் பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று என்னை வேதனை படுத்தும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.. 
நடிகை ராதா மகள் கார்த்திகாவுடன் நாகசைத்தன்யா 
    

No comments:

Post a Comment