Saturday, June 18, 2011

பத்திரிகை ஆசிரியரை மணந்த நடிகை

 பிரபல திரைப்பட நடிகை ஸ்வேதா மேனன்- ஸ்ரீவத்சன் மேனன் காதல் திருமணம், திருச்சூர் வளாஞ்சேரியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் தமிழில் 'சிநேகிதியே 'உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த மலையாளப்படம் ஒன்று தமிழில் 'தாரம் 'என்ற பெயரில் வெளிவந்ததது. இவரது நடிப்பில் 'ரதி நிர்வேதம்' என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைப் போடு போடுகிறது.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில், ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிவரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

அதன்படி, இன்று, வளாஞ்சேரி வடக்கும்புறத்தில் உள்ள இந்திரா சதன் என்ற வீட்டில் திருமண நிகழ்ச்சிகள் நடந்தன .    காலை 11 மணிக்கு ஸ்ரீவத்சன் மேனன், நடிகை ஸ்வேதா கழுத்தில் தாலி கட்டினார்.

மணமகன் ஸ்ரீவத்சனும், நடிகை சுவேதா மேனனும், பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் திருமணம் பற்றி சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஸ்வேதா, யாருடன் திருமணம் என்பதை இரண்டு ஆண்டு கழித்துதான் முடிவு செய்வேன் என்று கூறி வந்ததார். இந்த நிலையில், இப்போது திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, June 17, 2011

கவர்ச்சியில் இரண்டு வகை - விளக்கம் தரும் நடிகை


 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கும் அழகு குயில் அத்வைதா. பாவாடை தாவணி அணிந்து கிராமத்து பெண்ணா‌கவே மாறி விட்ட அத்வைதா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தமான படம் சகாக்கள். அழகர் சாமியின் குதிரை முதலில் வந்து அறிமுகப்படமாகி விட்டது. கீர்த்தி ரெட்டி என்ற நிஜப்பெயரை சினிமாவுக்காக அத்வைதா என்று அல்ட்ரா மாடர்னாக மாற்றியிருக்கும் அவர், சினிமாவுக்கு முன்பு நிறைய மேடை நாடகங்களில் நடித்திருக்கிறாராம். கேரள மோகினி ஆட்டத்தை முறைப்படி கற்றிருக்கும் அவர் 16 ஆண்டுகளாக நடனம் கற்று வருகிறாராம்.

அழகர் சாமியின் குதிரை படத்தில் தனது நடிப்பை பார்த்து நிறைய பேர் பாராட்டியதால் மகிழ்ச்சியில் இருக்கும் அத்வைதாவிடம் கிளாமராக நடிப்பீர்களா? என்று கேட்டால் கவர்ச்சி பற்றி பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறார். என்னை பொறுத்தவரை கிளாமரில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று முகம் சுளிக்க வைக்கிற மாதிரியான கிளாமர், இன்னொன்று டீசன்டான கிளாமர். பாவாடை, தாவணியில், ஏன் புடவையில்கூட ஒரு பெண் கிளாமராக தெரிவார். அது டீசன்டான கிளாமர். அதுபோன்று நடிக்க ஆசைப்படுகிறேன். என்று கூறுகிறார் அத்வைதா.

காதலன் பெயரை பச்சைக் குத்திய நடிகை

தனது காதலன் ரபேலின் பெயரை ஹிப்ரூ மொழியில், தன்னுடைய முதுகில் பச்சை குத்திக் கொண்டு உள்ளார் குத்து ரம்யா அலைஸ் திவ்யா ஸ்பந்தனாஸ். குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரம்யா. மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேத்தியான இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் இவருக்கும், ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் ரபேலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினர். பலகாலமாக இவர்களுக்குள் இருந்த இந்த காதல் சமீபத்தில் தான் தெரியவந்தது. நடந்த முடிந்த ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரில் நடந்த போட்டியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போட்டியை ரசித்தனர். இந்நிலையில் காதலன் ரபேலின் பெயரை தன்னுடைய கழுத்துக்கு கீழே முதுகில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் எனது காதலன் ரபேலின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளேன். மிகவும் வித்யாசமாக, பழமையான மொழிகளில் ஒன்றான ஹிப்ரூ மொழியில் அவரது பெயரை பச்சைக்குத்தி கொண்டுள்ளேன். ரபேல் என்றால் புனிதம் என்று அர்த்தம். ஆகையால் ஹிப்ரூ மொழியில் புனிதம்(‌செயின்ட்) என்று பச்சை குத்திக்கொண்டேன். நான் இவ்வாறு பச்சைக்குத்தி கொண்டது, ரபேலுக்கு தெரியாது. பின்னர் இதுபற்றி அவரிடம் விளக்கி கூறினேன், அவர் நெகிழ்ந்து போனார். ஒவ்வொருவரும் தங்களது காதலை பல்வேறு முறையில் வெளிப்படுத்துவார்கள். நான் எனது காதலை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளேன். என் வாழ்வில் ரபேல் வந்தபிறகு தான் சந்தோஷம் அதிகமானது என்றார்.

தெலுங்கு நடிகருடன் நிச்சயதார்த்தமா?- மறுக்கும் அனுஷ்கா!

 அனுஷ்காவும், நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் காதலிப்பதாக செய்தி வெளியானது. நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் இளம் ஹீரோவாக உள்ளார். இவருடன் பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா “சோஷத்” என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

அனுஷ்காவுக்கும், நாகசைதன்யாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். "நானும் நாகசைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தி பொய்யானது. நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாகசைதன்யா அறிமுகம் ஆனார்.

அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாக சைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

தற்போது படப் பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று என்னை வேதனை படுத்தும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்றார்.. 
நடிகை ராதா மகள் கார்த்திகாவுடன் நாகசைத்தன்யா 
    

Friday, June 3, 2011

இலியானாவின் அக்காவாக நடிக்கும் அனுயா

 .சிவா மனசுல சக்தி’ படத்‌தி‌ல்‌ ஜீ‌வா‌ ஜோ‌டி‌யா‌க நடி‌த்‌தவர்‌ அனூ‌யா‌. அவர்‌ தற்‌போ‌து ஷங்‌கர்‌ இயக்‌கும்‌ ‘நண்பன்’‌ படத்‌தி‌ல்‌ அக்‌கா‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌க்‌கி‌றா‌ர்‌. இதுப்‌ பற்‌றி‌ அவரி‌டம்‌ கே‌ட்‌டதற்‌கு, “சிவா மனசுல சக்தி’ படம் என்னை அடையாளம் காட்டியது. ‘மதுரை சம்பவம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பேசும் படியாகவே அமைந்தது
        .

எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ஷங்கரின் ‘நண்பன்’ல் கிடைத்த வாய்ப்பு. இலியானாவின் அக்காவாக நடிக்கிறேன். இது முக்கியமான வேடம். கிளைமாக்ஸ் என்னை சுற்றித்தான் நடக்கிறது. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.இதற்கு மேல் என் வேடம் பற்றி எதுவும் கூற முடியாது. இதன் ஷூட்டிங்கில் ஆகஸ்ட் வரை கலந்துகொள்கிறேன்.
அடுத்து இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ‘நான்’ படத்தில் நடிக்கிறேன். இப்படத்திலும் சஸ்பென்ஸ் வேடம். எனது வேடம்பற்றி சொன்னால் கதையின் சஸ்பென்ஸையே உடைத்ததுபோலாகி விடும். எனவே இரண்டு படங்களின் வேடத்தின் ரகசியம் காத்து வருகிறேன். நிறைய படங்கள் வந்தாலும் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன்" என்றார். 

ஹீரோவின் முகத்தை பார்த்து எடை போடக்கூடாது ! சரண்யா



கோலிவுட்டிலுள்ள ஹீரோயின்களுக்கு ஒரு வெற்றிப் படம் சரியாக அமைந்துவிட்டாலே அடுத்து பெரிய பெரிய ஹீரோக்களுடன்தான் ஜோடி சேருவேன் என்று அடம் பிடிப்பார்கள். அத்தகைய ஹீரோயின்களுக்கு மத்தியில் “கதைக்கேற்ற நாயகர்களோடும் நடிப்பேன்’ என்று களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் சரண்யா மோகனின் திறமையை மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும். கன்னக் குழியும், சின்ன விழியும் கொண்ட சரண்யாவிடம் “அழகர்சாமியின் குதிரை’ படம் அனுபவம் குறித்து கேட்டோம்.
"இந்தப் படம் எண்பதுகளில் நடக்கிற மாதிரியான கதைகளம்  என்னோட மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாமே எண்பதுகளில் இருக்கிற மாதிரிதான் இருக்கும். படம் முழுக்க சேலைதான், பிளவுஸ் கூட பார்த்தீங்கன்னா அந்த காலத்து மாடல்லதான் இருக்கும். தலையில ரிப்பன் எல்லாம் வெச்சுக்கிட்டு பக்கா கிராமத்துப் பெண்ணா நடிச்சிருக்கேன். சுசீந்திரன் ஸôர் கூட எனக்கு இது இரண்டாவது படம். அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
குரங்கனி மலை  பக்கத்துலேயே இருக்கிற “மாட்டுப்பட்டி’ங்கிற இடத்துலதான் சூட்டிங்கிற்காக தங்கினோம். மலைப்பாங்கான இடம் அது. ஏற்ற இறக்கமாதான் இருக்கும். மாட்டுப்பட்டி வரைதான் வண்டி எல்லாம் போகும். அங்கிருந்து ஒரு மூணு கிலோ மீட்டர் தள்ளிதான் எங்க லோக்கேஷன் இருந்தது. அங்க வண்டி எல்லாம் போகாது. சைக்கிள் கூட போக முடியாதுன்னா பார்த்துக்குங்களேன்.
வெயிட் எதுவும் எடுத்துக்கிட்டு போகணும்னா குதிரை மீதுதான் எடுத்துக்கிட்டு போகணும். அந்த மாதிரியான இடத்துக்கு தினமும் ஒரு அரைமணி நேரம் நடந்துதான் போய் சேருவோம். அது போல க்ளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது எல்லாம் பார்த்தீங்கன்னா திடீர்ன்னு பனி மேகம் வந்து மூடிக்கும். திடீர்னு மழை வந்திடும். திடீர்னு வெயில் அடிக்கும். அதனால மூணு நாள் படப்பிடிப்பு தள்ளிபோச்சு. அதுக்காகவே சரியான நேரத்துக்கு அந்த இடத்துக்குப் போய்விடுவோம்.
அந்த இடத்துல நாங்க தான் முதன்முதலாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். அங்கு தங்குவதற்கு எந்தவித வசதியும் கிடையாது. படப்பிடிப்பு முடியும் வரை எல்லாரும் ஒண்ணா, ஒரே இடத்துலதான் தங்கினோம். அந்த இடத்துல மொத்தமே இருபத்தி எட்டு குடும்பம்தான் இருந்தது. அந்த மக்கள் எல்லாம் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. எங்களுக்கு என்ன தேவைன்னு பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்டாங்க!எங்க பார்க்கணும், எப்படி நிக்கணும்ங்கிறது எல்லாமே டைரக்டரோட  முடிவுதான். அவர் எப்படி நடிக்க சொன்னாரோ அப்படியே நடிச்சிருக்கேன் .
எல்லோரும் பெரிய ஹீரோக்களோடு ஜோடி சேர ஆசைப்படும்போது நீங் அப்புகுட்டிக்கு ஜோடியா நடிச்சிருக்கீங்களே?
"பொதுவா நான் ஒரு படம் கமிட் பண்ணும்போது, அந்தப் படத்தினுடைய கதையையும், அதில் என் கதாபாத்திரத்தையும் மட்டும்தான் பார்ப்பேன். அதில் யார் ஹீரோவா நடிக்கிறாங்கன்னு பார்க்க மாட்டேன். எனக்கு இந்தக் கதையை கேட்டதுமே ரொம்ப பிடிச்சு போச்சு. இந்த கதை மீதும், டைரக்டர் மீதும் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருந்தது. அப்புகுட்டியும் இந்த துறைக்கு புதுசு இல்ல. அவர் ஏற்கெனவே நடிச்சுகிட்டு இருக்கிற ஆர்ட்டிஸ்ட்தான். பொதுவாக நம்முடைய நிறம், அழகு, உருவம் எல்லாம் இறைவன் கொடுப்பதுதான். அதனால் எந்தப் படத்திலும் நாயகனின் முகத்தைப் பார்த்து எடை போட கூடாது.                           
         
அந்தப் படத்தின் கதையும், அவங்க நடிப்பையும் பார்த்துதான் எடை போடணும். அதுதான் சரி. அந்த விதத்துல அப்புகுட்டி ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. அவருடைய திறமை “அழகர்சாமியின் குதிரை’யில் நன்றாகவே  வெளிப்பட்டிருக்கிறது."
தெலுங்குக்கு  போனீங்களே. அங்கு வரவேற்பு எப்படியிருந்தது?
"தமிழில் நல்ல கதைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். நிறைய படங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் எல்லாமே வந்து போகிற மாதிரியான கேரக்டர். எதுவுமே எனக்கு நம்பிக்கையளிக்கிற மாதிரியில்லை.
அதுவும் இல்லாமல் சிறந்த இயக்குநரின் படங்களிலோ அல்லது பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களின் படங்களிலோதான் நடிக்க ஆசைப்படுறேன். அந்த மாதிரியான வாய்ப்புகள் எதுவும் தமிழில் அமையவில்லை. அதனாலதான் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கிட்டேன்.
அதுமட்டுமில்லாமல் போன வருடம் தெலுங்கு இண்டஸ்ட்ரி பக்கம் போய் கொஞ்சம் பிஸியா இருந்துட்டேன். “வெண்ணிலா கபடி குழு’ படம் தெலுங்கில் ரீ-மேக் பண்ணினாங்க, அதில் நான் நடிச்சிருந்தேன். அந்தப் படம் அங்கே எனக்கு பெரிய சக்ஸஸ் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அங்கே நான்கு படங்களில் நடித்துவிட்டேன்.எனக்கு பிடித்த சினிமா தமிழ் தான் தான்,அதில் தான் முயற்சி செய்கிறேன் : என்றார்.

பந்தா பண்ணும் நடிகை

 'கந்தா' படத்தில் முதன்முதலாக நடித்தார் மித்ரா.அடுத்ததாக 'சூரியன் சட்டக்கல்லூரி' படத்தில் நடித்தார்.இந்த படம் தான் முதலில் வெளிவந்தது.இதற்குபிறகு 'காவலன்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.அதில் தன பெயரை மித்ராகுரியன் என்று மாற்றினார்.இதுதான் தன முதல் படம் என்று சொல்லிவருகிறார்.இப்போது 'கந்தா' படம் வெளிவருகிறது.மித்ராவுக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை.என்ன காரணம் என்று விசாரித்தால் அம்மணி சம்பளம் அதிகம் கேட்பதாகவும்,ஓவர் பந்தா பண்ணுவதாகவும் சொல்லப்படுகிறது.