Thursday, April 11, 2013

சேட்டை-விமர்சனம்







 ந்தியில் வெளியாகி ஒரு சாராரின் வரவேற்பை மட்டுமே பெற்ற டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்
போட்டோகிராபர் ஆர்யாவும் கார்ட்டூனிஸ்ட் பிரேம்ஜியும் ஒர் அறைவாசிகள்..அதாங்க ரூம் மேட். அங்கு புதிய நபராக வந்து சேர்ந்து கொள்கிறார் சந்தானம். அவரும் பத்திரிகையாளரே. ஆர்யா விமானப் பணிப்பெண் ஹன்சிகாவுடன் சுற்றுகிறார். இன்னொரு பத்திரிகைகாரர் அஞ்சலியுடனும் ஒரு கிக் உண்டு.

ஹன்சிகா ஒரு வெளிநாட்டு மர்ம பார்சலை ஆர்யாவிடம்  கொடுத்து ஒரு குறிப்பிட்ட முகவரியில் கொடுத்துவிட்டு வரச் சொல்கிறார். அதற்குள் சந்தானத்தின் மருத்துவ சோதனைக்கான மலம் உள்ள டப்பாவையும் வைத்துவிட, புட்டி இடம் மாறி  போய்விடுகிறது. மர்ம பார்சலைத் தேடும் கும்பல் தலைவன் நாசர்..அசிங்கப் பார்சலைக் கண்டு கொதித்து எழ.. பார்சலைத்  தேடி ஆர்யா கும்பலைக் குறிவைக்க..முடிவு என்ன என்பதை நோக்கி  சீற்றமாக நாற்றமாக நகர்கின்றன காட்சிகள்.

இதையும் ஒரு கதை என்று   எடுத்து இந்தியில்  வெற்றி பெற..அதையே தமிழில் எடுத்திருக்கிறார்கள,.அசிங்கம் பற்றிக் கவலைப் படாமல்.

படத்தில் பெரும்பாலான காட்சிகளில் வரும் வசனங்களை நகைச்சுவையில் நனைத்துதான் வசனகர்த்தா ஜான் மகேந்திரன் எழுதியுள்ளார். அவற்றில் இளமை,துள்ளல், எள்ளல் எல்லாம் உள்ளன.ஓகே ஆனால்  நகைச்சுவைக் காட்சிகளுக்கு சந்தானம்தான் வசனம் எழுதியுள்ளாராம். அதுதான் சகிக்க முடியவில்லை.

சந்தானத்தின் கதாபாத்திரத்தின் பெயர் நாகராஜன்..அதை நடுப்பக்கம் நக்கி என்று கூறுகிறார்கள். விஸ்வநாதனை விச்சு, என்றும் கிருஷ்ணசாமியை கிச்சா என்றும் கூறுவது போல நாகராஜனை எப்படி சுருக்கி அழைப்பது..நாகு என்றோ நாகா என்றோதான் அழைப்பர். நக்கி என்று யாரும் அழைக்க மாட்டார்கள். இந்த பெயரே அசிங்கமாக இருக்கிறது.
சரி..நக்கியாக வரும் சந்தானம் இலியானா சிக்கன் சாப்பிட்ட பிறகு பிற்போக்கு தொந்தரவால் அவதிப்படுகிறார். கழிப்பறையில் பேதி போக, கழுவ தண்ணீர் இல்லாமல் தவிக்கும் காட்சியில் தியேட்டரையே நாறடிக்கிறார்.சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பேதி நாற்றம்அடிக்கிறது.இல்லையேல் ஆபாசமாக பேசி நாற்றம் அடிக்கிறது..பொதுவாக கட்டணக் கழிப்பறைக்குப் போக கட்டணம் செலுத்தவேண்டும்.இதில் பலலட்சரூபாய் சம்பளத்தை வாங்கிகொண்டு பலகாட்சிகளில் கழிப்பறைதான போய் வருகிறார் சந்தானம்.

தமிழில் இடக்கரடக்கல் என்று ஒரு வழக்கு இருக்கிறது. தவிர்க்கப்பட வேண்டிய....சொற்களைப் பேசும் போது நாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பதற்காகவே அந்த வழக்கு உள்ளது.நாம் வீட்டில் கழிவறை செல்லும் போது மலம் கழிக்க செல்கிறோம் என்றோ ஆயி இருக்கப் போகிறோம். ....இருக்க போகிறோம் என்றோ கூறுவதில்லை. நாகரிகமாக காலைக்கடன் என்றும் வெளியே என்றும் சொல்கிறோம். ஆங்கிலத்தில் கூட TOILET    என்று இப்போது எழுதுவதில்லை  REST ROOM      என்றே எழுதுகிறார்கள்.

ஆனால் 'சேட்டை' படம் முழுக்க ஆயி...குசு என்று அருவருப்பாக பேசிக் கொண்டே குமட்ட வைக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த வசனங்களின் படைப்பு சந்தானமாம். யூடிவி 'மோஷன்' பிக்சர்ஸ் என்பதை இப்படி தவறாகப் புரிந்து கொண்டு விட்டாரே.

டெல்லி பெல்லி கதையை இயக்குநர் கண்ணனே அழகாக நாகரிகமாக மாற்றியிருக்க முடியுமே.
படத்தை இயக்குநர் முழுநீள கலகலப்பு ரகத்தில் தரத்தான் விரும்பியிருக்கிறார்.ஆனால் இடையில் பிரச்சினைகள் ஆயி..வேண்டாத பேச்சுகள் ஆயி..தரக்குறைவு என்று ஆயி விட்டது.ஆனது ஆயி விட்டது.. சே என்னது இப்படி ஆயி விட்டது. சந்தானத்தின் காமடி இப்படிஆயி விட்டது. சாரி.. ஆக்கி விட்டது
சரி நல்லவற்றைப் பாராட்டலாம்  படத்தில் பார்க்கும்படி என்ன என்னதான் இருக்கின்றன?

ஆர்யா சாக்லேட் பாயாக ரசிக்கும்படி வருகிறார். ஜேகே பாத்திரத்தில்  துறு துறு புகைப்படக் காரராக வந்து  கவர்கிறார். ஹன்சிகா,அஞ்சலி இருவருடனும் ரொமான்ஸ் செய்யும் பாடல் காட்சிகளில் ரசிக்கலாம். கார்ட்டூனிஸ்ட் சீனுவாக வரும் பிரேம்ஜி அடக்கி வாசித்தே சிரிக்க வைக்கிறார். இவருக்கும் டூயட் உண்டு.அது ஒரு கலர்புல் கதகளியாக சிரிக்கவைக்கிறது.ஹன்சிகா வந்தாலே போதும் போலிருக்கிறது. வெள்ளைத் தோல் வலிமையே போதும் வெற்றி வந்து சேர்ந்துவிடும் அவருக்கு.. அஞ்சலி ஆங்கிலப் பத்திரிகை நிருபராக ஏராள கண்மையுடன் வருகிறார். தாராள முதுகுடன் வந்து கவர்ச்சியும் தருகிறார்.

.

No comments:

Post a Comment