பிரபுதேவா, தற்போது இந்தியில் இயக்கி வரும் 'ரவுடி ரத்தோர்' படத்திற்காக
சென்னையில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த விருந்தில்
ஐ.பி.எல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானும்
கலந்துகொண்டார். ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடந்த தினத்தன்று இந்த விருந்து
நடைபெற்றதால், சென்னை அணியை வென்ற கொல்கத்தாவுக்கு பிரபுதேவா விருந்து
வைப்பதா? என்று பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்ட அறிக்கையில், "பிரபுதேவா ரவுடி ரத்தோர் படக்குழுவினரின் விருந்து என்ற பெயரில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் வென்ற கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கும் அந்த அணியை ஆதரித்த மும்பை நடிகர், நடிகைகளுக்கும் சென்னையில் விருந்து கொடுத்து குதூகலித்தது வேதனை அளிக்கிறது.
பிரபுதேவா வாழ்ந்தது வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில். இங்குள்ள ரசிகர்களால்தான் பிரபலமானார். இந்திப் படம் இயக்கப் போனதும் மாறிவிட்டார். இந்தி நடிகர்கள் தான் அவருக்கு பெரிதாக தெரிகிறார்கள். சென்னை அணி தோற்றதும் விருந்தையே ரத்து செய்து இருக்க வேண்டும். அல்லது கொல்கத்தா அணியினரை அழைக்காமல் விட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டது தமிழர்களுக்கு எதிரானதாகவே கருதப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் பிரபுதேவா தரப்பில் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்கள். ரவுடி ரத்தோர் படக்குழுவினர் சார்பில் தமிழ், இந்தி நடிகர், நடிகைகளுக்கு இந்த விருந்து கொடுக்கப்பட்டது. அப்படத்தில் நடித்த அக்ஷய்குமார், சோனாக்சி பங்கேற்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர். விருந்து நடந்த அன்று யதேச்சையாக கொல்கத்தா அணி வென்றுள்ளது. அதற்கும் விருந்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment