Friday, May 6, 2011

முறிந்துபோன காதல் ;மூடு-அவுட் ஆன தமன்னா

 தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2009-ல் 5 படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். . 2010-ல் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் நடித்திருந்தார் .

ஆனால் 2011-ல் இதுவரை அவர் நடித்து 1 படம்தான் வந்துள்ளது. இன்னும் வரவேண்டியிருப்பது தனுஷுடன் அவர் நடித்துள்ள 'வேங்கை'தான்.

வேறு தமிழ்ப் படங்களே அவர் கைவசம் இல்லை. டாப்சி ,ஹன்சிஹா போன்ற புதிய நடிகைகள் வரவால் இந்த நிலை என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறாம்.தமிழ் சினிமா ஹீரோ ஒருவருடன் அவருக்கிருந்த நெருக்கமான காதல் முறிந்து போனதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்த மனக் காயத்தை மறக்கவே தமிழ் சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டாராம் தமன்னா .சில தினங்களாகவே  அவர் மிகுந்த மன உளச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment