பாணா காத்தாடி விமர்சனம்
பிளஸ்டூ படிக்கும் அதரவா கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சமந்தாவை காதலிக்கிறார்.அவரும் அதர்வாவை காதலிக்கிறார்,லாஜிக் வரக்கூடாது என்பதற்காக 'என்னை எட்டு வயதில் தான் ஸ்கூல்ல சேர்த்தாங்க' என ஒரு டயலாக்கில் சப்பைக்கட்டு காட்டுகிறார் அதரவா.
தினசரி போகும் பஸ்ஸில்இறுதிக்காட்சியில்அதரவாவிடம் மீண்டும் சமந்தா காதலைப் புதுப்பிக்கும் போது பஸ்ஸில் இருந்து அதரவா தவறி விழுந்து பஸ்ஸில் அடிபட்டு இறந்து விடுகிறார்.
நாயகனாக நடிகர் முரளி மகன் அதரவா அறிமுகம்.நடிப்பு பரவாயில்லை.தோற்றத்திற்கும்,குரலுக்கும் சம்மந்தமில்லை.(சொந்தக்குரல்) பீங்கானை சாப்பிட்டுவிட்டு பேசுவது போல் உள்ளது.
சமந்தாவின் இளமையை ரசிக்கலாம்.அதரவாவின் அம்மாவாக மௌனிகா.அவர் பேச ஆரம்பித்தாலே அலறி ஓட வேண்டியிருக்கிறது.அவரது குரலும்,சென்னை பாஷையும் படு செயற்கைத்தனம்.
பாணா காத்தாடி-மாஞ்சாவும் சரியில்லை.நூலும் சரியில்லை என்பதால் பட்டம் பறக்கவில்லை.
No comments:
Post a Comment