முத்த காட்சியில் அதிக டேக் வாங்கிய நடிகர்
வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஷ்ணு. இவர் தற்போது மணிரத்னம் உதவியாளர் சுதா கே. பிரசாத் இயக்கும் ‘துரோகி’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூனம் பஜ்வா நடிக்கிறார். இவர்கள் இருவரும் நடித்த காதல் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது. காட்சியின் படி, பூனம் பஜ்வாவுக்கு விஷ்ணு முத்தம் கொடுக்க வேண்டும்.
ஆனால், பூனம் பஜ்வா நடிப்பதற்கு தயாராக இருந்தார். கதாநாயகன் விஷ்ணுவுக்கு பதட்டம் வந்துவிட்டது. ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து படப்பிடிப்பு குழுவினரின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்றவர், முத்த காட்சி என்றதும் பயந்து வெளவெளத்துப் போனார். ஒரு டேக்கில் நடித்து முடிப்பதற்குள் அவருக்கு வேர்த்து கொட்டிவிட்டதாம். இப்படி பத்து டேக் வரை நடித்து, அத்தனையும் ஓகே. ஆகாமல் போய், கடைசியில் பதினோராவது டேக்கில் முடித்திருக்கிறார்.
இது பற்றி அவர் கூறும் போது, “காதல் காட்சிகளில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அப்போது எனக்கு படபடப்பாக இருக்கும். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. பூனம் பஜ்வா கூலாக இருந்தார். என்னால்தான் அது பல டேக்குகள் போனது” என்றார்.
No comments:
Post a Comment