Thursday, November 8, 2012

நடன நடிகரின் காம லீலைகள் !

                    

ரையிருட்டுத் தண்டவாளத்தில் அரும்பு மீசைப் பையனாக ஹீரோவுக்குப் பின்னால் இவர் வளைந்தாட்டம் போட்டபோது சினிமா உலகம் சரியாக கவனிக்கவில்லை. அதன்பிறகு வரிசையாக பல படங்களில் திரைக்குப் பின்னே இவருடைய திறமை விரிந்த போதும்கூட சரியாக இவரை கவனித்ததாகவோ, கணித்ததாகவோ சொல்ல முடியாது.
திறமைகளை நச்சென்று அடையாளம் கண்டு, நறுக்கென்று உயர்த்திப் பிடிக்கிற ஒருமெகாடைரக்டரின்  தங்கக்கரம் பட்டபிறகுதான் தடதடவென கிராஃப் இவருக்கு ஏற ஆரம்பித்தது. அந்த காலத்திலேயே இவருடைய வெள்ளந்திப்பேச்சுக்கும், விறுவிறு மூச்சுக்கும் அடிமையான நடிகைகள் அதிகம் என்று சொல்வார்கள்.அப்பாவின் பலத்தில் வந்த எத்தனையோ வாரிசுகள், நிலைத்து நிற்க முடியாமல் நீர்த்துப் போகிற இந்தக் காலத்தில் அப்பாவையே தூக்கிச் சாப்பிட்ட அவருடைய அசகாய டேலன்ட்டும், மளமளவென பல்துறை வித்தகராக மாறிய பக்குவமும் பலரை அசர வைத்த ஒன்று.
ஊரெல்லாம் அவர்மீது கண்ணாக இருக்க, தன் மனசில் பதிந்த ஒரு மூன்றாம் வரிசைப் பெண்ணையே (குரூப் டான்ஸர்) தன் வாழ்க்கைக்கு அவர் வரித்துக்கொண்டபோது வீட்டில் சரியான கலாட்டா. அதுபற்றி அவர் கவலைப்பட்டாரில்லை. ஊருக்கெல்லாம்நான் இப்பவும் பேச்சிலர்தான்என்று பகிரங்கமாக அறிவித்துவிட்டு, எம்பெருமான் ஏரியாவில் ஒதுக்குப்புறமான இடத்தில் தனிக் குடித்தனம் போட்டார்.
நடிகராவதற்கு முன்பு, ஆரம்ப காலத்தில் பயிற்சி கொடுக்கும்போதே லேசுபாசான உரசல்களால் ஆர்ட்டிஸ்டுகள் மனசை அலைபாய வைப்பார். அப்படித்தான் இப்போது பாலிடிக்ஸ் பரந்தாமனின் அன்புக்குரிய நடிகையை அந்தக்காலத்தில் இவர் எறும்பாகக் கடித்த கதையும். விரல்களின் வழியாகவே தன் வார்த்தைகளை பரவச் செய்து, சந்தனக்கட்டையை தன் சாட்டைக்கேற்ற பம்பரமாகச் சுழலச்செய்தார்.
முதல் பெரிய படத்தில் ஜோடி போட்ட மும்பை முந்திரி , தாய்ப் பாச கம்பெனி (அம்மா புரொடக்ஷன்ஸ்) எடுத்த கிராமத்து படத்தில் தன்னோடு வந்த ரோசக்கார நடிகை என்று வரிசையாக இவர் விரல் பாஷை பேசிய பட்டியலை சீடப் பிள்ளைகள் இப்போதும் ரூம் போட்டு ரசித்துப் பேசுகிறார்கள். ‘நம்ம தலைவரு அம்பு தொடுக்கறதுக்கு முந்தியே மடியில் விழுதே மாங்கனிகள்!’ என்று அந்த சீடர்கள் பெருமூச்சோடு சொல்வதைப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.
அதிலும், எப்போதும் செவ்வரியோடிய கண்களுடன் வளையவரும் மாநிறத்துப் பூவோடு இவர்ரிகர்சல்என்ற பெயரால் நடத்திய ரியல் காட்சிகளை ஒண்டி ஒளிந்து நின்று பார்த்த சீடக் கண்மணிகளும் உண்டாம். ”எப்பவுமே எனக்கு கைக்கு அடக்கமா இருக்கிற பசங்களைத்தான் பிடிக்கும்என்று படப்பிடிப்பு இடைவேளையில் நெருக்கமானவர்களிடம் ஓப்பனாகவே இந்த ஹீரோ பற்றி சிலாகித்ததுண்டாம் மாநிறத்துப் பூ!
இவருக்கொரு விநோதப் பழக்கம் உண்டு. இவரே சில ஜிலுஜிலு நண்பர்களிடம் அதை சொன்னதும் உண்டு. ”அதென்னவோ தெரியலைப்பா பொம்பளைங்களைப் பார்த்தாலே எனக்கு விதம் விதமான பலகாரம் மாதிரிதான் தோணுது!” என்பாராம். லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு, பால்கோவா என்று இவர் செல்போனில்கூட நடிகைகள் சிலரின் பெயர்களை இவர் மனதுக்குத் தோன்றிய ஸ்வீட்களாகத்தான் வகை பிரித்துப் போட்டு வைத்திருப்பாராம்.
கண்ணால வரிசையில் ரொம்ப நாளாகக் காத்திருந்த நடிகை, இவர் கண்ணுக்குப் பால் கோவா. டபுள்  ஹீரோயின்களில் ஒருத்தராக அவர் ஜோடி போட்ட படத்தின்போதுஹலோஎன்ற ரேஞ்சில்தான் ஆரம்பித்ததாம் எல்லாமே. பால்கோவாவின் அம்மாவைப் பொறுத்தவரை தன் கண்ணு முன்னால் பார்த்து வளர்ந்த பிள்ளை என்பதால் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் பழக அனுமதித்தார். இங்கேதான் சாத்தான் சாட் பூட் திரீ ஆட ஆரம்பித்தது. திடீர் வேலை வந்துவிட்டதால் அம்மாவால் இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்புக்கு வரமுடியவில்லை. நம்மாளுதான் டைம் மேக்கராச்சே கண்ணாலே கரெக்ட் செய்த கில்லாடி ஆடு, ஷூட்டிங் ஸ்பாட்டின் இருட்டு நிழலிலேயே பசும்புல்லை பகபகவென்று மேய்ந்து முடித்ததாம்.
அதுவரை பாத்ரூம் போகக்கூட அம்மா விடம் அனுமதி கேட்கும் நடிகை, சொல்லாமல் கொள்ளாமல் காரை எடுத்துக்கொண்டு நேரம் காலம் பாராமல் நடிகரைப் பார்க்க ஆரம்பித்தார். தாய்க்குலத்துக்கு விஷயம் தெரியவரஆற்றிலே கொட் டினாலும் அளந்து கொட்டணும் பொண்ணே இப்படி திரும்பத் திரும்ப ஒருத்தன் பின்னால் சுற்றினால் அடுத்து வரும் வாய்ப்பெல்லாம் காற்றில் கரைந்துவிடும்என்று கண்டபடி திட்டி பிரித்து வைத்தாராம் அம்மா.
திடீரென ஒரு நாள் நடிகை வீட்டில் பூகம்பம் வெடித்தது. அதுவரை அம்மாவை ஒரு வார்த்தைகூட எதிர்த்தே பேசாத மகள், ”இதுவரைக்கும் நீ நீட்டுன பேப்பர்ல எல்லாம் கையெழுத்துப் போட்டிருக்கேன். காட்டுன ஆளுங்களையெல்லாம் மதிச்சிருக்கேன். எனக்குனு என்ன இருக்கு? அவரை எனக்குப் புடிச்சிருக்கு!” என்று கல்யாண குண்டு தூக்கி வீச மூலதனமெல்லாம் மொத்தமாக அடித்துக்கொண்டு போவதை எண்ணிப் பதறித் துடித்தார் அம்மாக்காரி.நிலைமை தலைக்குமேல் போய்விட்டதை உணர்ந்த தாய், நடிகரின் அப்பாவை நேரில் பார்த்தார். ”நான் கொடுத்த சுதந்திரத்தை உங்க மகன் தப்பாப் பயன்படுத்திக் கிட்டான்!” என்று அழுது புலம்பினார்.
உடனே வீட்டுக்குள்ளிருந்த நடிகரை அழைத்த தந்தை, ”உனக்குத்தான் ஏற்கெனவே கல்யாணம் ஆயிடுச்சே அப்புறமேன் இன்னொரு பெண்ணோட வாழ்க்கையில் குறுக்கிடுறேஎன்று ருத்ர தாண்டவம் ஆடித் தீர்த்துவிட்டார்.
அதோடு அந்த தொடர்பு அறுந்துபோனதா என்று யாருக்கும் தெரியாது. ஆனால், கல்யாணப் பேச்சை நடிகை அப்படியே அம்மா வசம் விட்டுவிட்டார். அதுமட்டுமில்லை. தானே பஞ்சாயத்துக்கு ஆளான இந்த நடிகர், அடுத்த கொஞ்ச நாளிலேயே தன் சொந்த வீட்டுக்குள்ளேயே கிளம்பிய அடுத்ததொரு காதலைக் கத்தரிக்கும் பஞ்சாயத்தில் இறங்கியது தான் வேடிக்கை விநோதம்.
ஆம், இளசுகளின் இதயங்களில் கிண்கிணி சத்தத்தைக் கிளப்பிக்கொண்டிருந்த கிரானைட் இடையழகிக்கும் நடிகரின் வீட்டுக்குள்ளிருந்த மற்றொரு காளைக்கும் காதல் என்று ஊர் சொன்னது. மேளம் கொட்டப் போகிறார்கள் இருவரும் என்று வீடு வரை சேதி வந்தது. அப்பாக்காரர் மறுபடி ருத்ர தாண்டவம் போட்டார். இந்தச் சூழலில் ஐஸ் மழை கொட்டும் வெளிநாட்டில் மிஸ் கிரானைட்டுடன் நம்ம ஹீரோவுக்கு ஒரு ஷூட்டிங் வந்தது. கடுங்குளிரில் இருந்து விடுபடுவதற்காக அந்த அம்மணி ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு கிடுகிடுக்க மெதுவாக அவரை அணுகிஉள்ளுக்கும்ஸ்வெட்டரை ஊற்றிக் கொடுத்த நம்மவர் மெதுவாக போர்வையைப் போர்த்திவிட்டு தானும் உறங்கிப்போனாராம்.
அப்புறமென்ன அன்று முதல் நடிகையின் கவனம் ஒற்றைப் புள்ளியிலிருந்து சிதறி, இந்தப் புள்ளி பக்கமும் பாய அப்படி இப்படி இருந்த நேரத்தில் மெதுவாக பேச்சை ஆரம்பித்துஇப்ப என் மேலே நீங்க வச்சுருக்கிறது என்னவோ அதுவேதான் எங்க குடும்பத்து இன்னொரு காளை மேலே இருப்பதும். அதனால், காதல் கத்தரிக்காய் என்று குழம்பித் தவிக்காதீர்கள்என்று நேக்காக அட்வைஸைக் கொளுத்திப் போட்டு அதோடு முடித்தாராம் தன் அப்பாவின் தலைவலியை.
அப்படியெல்லாம் பக்குவம் காட்டியவரா இப்போது இப்படி என்றால் அதற்கு இந்த ஜூனியர் பூனையிடம் பதில் கிடையாது!
ஆண்டவன் உடம்பால் இவரை உயரமாகப் படைக்கவில்லையே தவிர, இவர் ஆசைப் படுவதெல்லாம் இன்னும் இன்னும் உயரப் பறக்கிற பறவைகளுக்குத்தானாம். பார்ப்பதற்குத் துளியும் பந்தா இல்லாத பணிவு காட்டுவார். கைவசம் இருக்கிற திறமையால் பிரமிப்பு ஏற்படுத்துவார். வலியப் போய் பழகாமல் விலகி ஆட்டம் காட்டுவார். இதிலேயே சக நடிகைகள் பலரும் சரண்டரானதுண்டு.
விருப்பப்பட்டு தன் தாளத்துக்கு ஏற்ப ஆடாவிட்டால் எப்படி பெண்டு நிமிர்த்துவது என்று இவருக்கு அத்துப்படியாம். அப்படியும் இவரிடமிருந்து விலாங்கு மீனாகத் தப்பி வேடிக்கை காட்டியது ஒரு வடநாட்டு உயர் நடிகை. நடிப்பில் தனக்கு இணையாக வரமுடியாத அளவுக்கு ஒரு காட்சியை செட் பண்ண வைத்து, ஒரே மூச்சில் நடிகையிடம் டேக் வாங்கும் படி இயக்குநருக்குக் கண்ணை காட்டி னாராம். நடிகையோலைட்ஸ் ஆன் ஆக்ஷன்குரல் வந்ததும், அசால்டாக தன் பங்கை முடித்துக் கொடுக்க யூனிட்டே கைதட்டியது. நம்மவர் முகம் சுண்டிப் போனாராம். படத்தின் பேரிலேயே காதல் இளவரசன் (ரோமியோஇருந்தும், தன் ஆசைக்கு வடிகால் தேட முடியாமல் நடிகர் இறுகிப் போக அந்தப் படத்து ஷூட்டிங் முடிவதற்குள் இவருடைய பரிதாப முகத்துக்கும், அதிவேக திறமைக் கும் தானாகவே இளகிப் போன வடநாடு மெதுவாக ஒருநாள் இணங்கி வந்தததாம். அப்புறமென்ன ஸ்பிரிங் மெத்தைக்கு சுளுக்குதான்!
                
நடிகரைவிட உயர்வான இடத்துக்குப் போன பிறகு இவருக்கும் மலையாள மாங்காய்க்கும் இடையே நடந்த டிராமாவை இப்போதும் அந்த யூனிட் பேசுகிறது. ஷூட்டிங் தொடங்கிய சில நாட்கள் வரை மந்திரிச்சுவிட்ட ஆடாக மாங்காயின் பின்னாடியே சுற்றித் திரிந்தாராம் இவர். ஒரு கட்டத்தில் அலைச்சலுக்கு அனுகூலமான சேதி வந்தது. ”ஆசைக்குத் தீனிபோட ரெடி. ஆனால், அப்பாசாமி அருகிலேயே இருக்கிறாரே!” என்று கையைப் பிசைந்திருக்கிறார் நடிகை. அதைக் கேட்டு மனசை பிசைந்த நம்மாளு, அப்பாசாமியின் பூர்விகமான அவ்விட பூமியிலிருந்து ஷாக் நியூஸ் ஒன்றை அங்குள்ள தன் நண்பர் மூலமாகவே அனுப்ப வைத்தாராம். பதறியடித்துக்கொண்டு அப்பா தாயகம் பறக்க இங்கே விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே விருந்து நடந்ததாம். அப்பாவை ஊருக்கு அனுப்ப தான் போட்ட டிராமாவை இவர் மெதுவாகச் சொல்ல முதலில் செல்லமாகக் கோபித்துக்கொண்ட நடிகை, அப்புறம்இந்தக் குறும்புதான் உங்களை இன்னும் இவ்ளோ யூத்தா வச்சுருக்கு!” என்று மார்பில் குத்தி சிணுங்கினாராம்.
வடக்கிலிருந்து அழைப்பு வருகிற வரையில் இருவருக்குமான தொடர்பில் எந்த மறதியும் இல்லாமல் தொடர்ந்ததாம். ”நல்லகாலம் மாங்காய் கிளம்பி மும்பை போயிடுச்சு. இல்லாட்டி இப்போ நடக்கிற கூத்தில் அதோட பேர்தான் அடிபட்டிருக்கும்!” என்று விளக்குகிறார் விஷயமான ஒருத்தர்.
முன்னொரு காலத்தில் குதிரையாக ஃபீல்டில் சீறிப் பாய்ந்துவிட்டு, இப்போது வெயிட்டாக சீரியலில் செட்டில் ஆகிவிட்ட ஒருத்தரின் இளவல் இவருக்கு நெருக்கமான ஃபிரெண்டு. ஒரே ஒரு படத்தில் இங்கே தலைகாட்டியவர், பிறகு எப்படியோ மும்பை பக்கம்போய் அங்கிருப்பவர்களை ஆட்டுவித்து குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறாராம் அந்த நண்பர். நடிகரும் அவரும் லைக் மைண்டட் என்பதால் விருப்பங்கள் பல சமயம் ஒரே நேரத்தில் கிளர்ந்தெழுமாம். உடனே செல்போனில் பரிமாற்றம் நடக்கும். ஃப்ளைட்டில் இவர் பறந்தோட மும்பை ஃப்ளாட்டில் எல்லாம் தயாராகக் காத்திருக்குமாம். இவர் மும்பை போகிற பல சமயங்களில் இன்னொரு ஒளிமய நடிகரும் ஒட்டிக் கொள்வதுண்டாம்.
லாலா கடை ஸ்வீட்களை வகை வகை யாக ருசித்தவருக்கு இப்போது குழாய் புட்டு உறவுதான் முழுசாக இனிக்கிறதாம். ”சுற்றியிருப்பவர்களை வருத்தி, கேரியரை குழப்பிக்கொண்டு இதெல்லாம் தேவையா? கிரானைட்டுக்கு நீ சொன்ன அட்வைஸை இப்போ உனக்கே சொல்லிக் கொள்!” என்று குடும்பத்துக்காளை இவருக்கு எடுத்துச் சொல்கிறார். ஆனால், ஏறவில்லையாம்.

குறிப்பு : இப்பதிவு யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.

நன்றி ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment