Friday, July 20, 2012

ஒளிப்பதிவாளரை மிரட்டிய இயக்குனர்

'புதுமுகங்கள் தேவை'படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் ராம்குமாரின் மகனுமான  சிவாஜி தேவ் கதாநாயகனாக நடிக்கிறார். (இவர் பூனைக்குட்டியாக படுத்துக்கொண்ட'சிங்கக்குட்டி' படத்தில் அறிமுகமானவர்). அவருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் "மழை" படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிறப்பு அழைப்பாளர்கள் இந்த படத்தையும் அந்த குழுவினரையும் பாராட்டி பேசினர்.  குறிப்பாக ராஜேஷ் யாதவை அனைவரும் கிண்டல் செய்தும் பாராட்டியும் வாழ்த்தினர். 
மேடையில் பேசிய பிரபு சாலமன், கடமைக்கு பாராட்டுவதைப்போல்புதுமுகங்கள் தேவை' குழுவினரை பாராட்டினார்.  அவர் பேசுகையில் ஒளிப்பதிவாளரும் இந்த படத்தில் நடிக்கும் அறிமுக நடிகருமான ராஜேஷ் யாதவை பற்றி நையாண்டியாக பேசிவிட்டு, அவரை நட்பு ரீதியாக அறிவுரை கூறுவதுபோல்  சினிமாத்துறையில் இருவகை தொழில் செய்ய நினைப்பவர்களை மிரட்டலுடன் எச்சரித்தார்.  அதாவது பிரபு சாலமனின் அடுத்த படைப்பில் ராஜேஷ் யாதவிற்கு ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்படும் என்றும் அவர் ஏன் இதை சொல்கிறார் எனவும் கூறினார். பிரபு சாலமனின் "கொக்கி" படத்தில் ஒளிப்பதிவாளர் ஜீவன் ஒளிப்பதிவு செய்ததாகவும் பின்பு அவர் இயக்குனராக முயற்சித்ததாகவும் அதனால் அவருக்கு இனி ஒளிப்பதிவாளர் வாய்ப்பு கொடுக்கமாட்டேன் என்று ஜீவனிடம் கூறியதாகவும்,  ஒருவர் அவர் தொழிலை மற்றும் செய்யவேண்டும் மற்ற தொழில் செய்யக்கூடாது இதை ராஜேஷின் நண்பர் என்ற முறையில் அவருக்கு அறிவுறுத்துவதாக குறிப்பிட்டார்
.
பிரபு சாலமன் உண்மையில் ராஜேஷை நண்பராக கருதி இருந்தால், இந்த விவரத்தை ஒரு பொது மேடையில் அதுவும் ராஜேஷ் பணிபுரிந்திருக்கும் ஒரு மேடை விழாவில் ஏன் பிரபு சாலமன் கூறினார் என வந்திருந்தவர்கள் புலம்பினர். அதுமட்டுமின்றி பிரபு சாலமன் அருகில் அமர்ந்திருந்த அவருடைய நண்பர் சமுத்திரக்கனி மற்றும் இயக்குனர்கள் அமீர், சசிகுமார், சேரன், மிஸ்கின், எஸ்.ஜே.சூரியா, சுந்தர்.சி., மற்றும் பல இயக்குனர்கள் நடிக்கின்றனர். இவர்களுக்கு வேண்டுகோள் விடுக்காமல் ராஜேஷ் யாதவை மட்டும் குறிப்பிட்டு எச்சரிக்கை விட்டு மிரட்டி பேசுவதற்கு காரணம் மற்றவர்களை மறைமுகமாக மிரட்டுவதா? என அனைவரையும் யோசிக்கவைக்கிறது.

No comments:

Post a Comment