சு.வெட்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலைத் தழுவி இயக்குனர் வசந்தபாலன் கைவண்ணத்தில் உருவான படம் அரவான்.
வேம்பூர் கிராமத்தின் தலைவன் பசுபதி களவாடுவதில் கில்லாடி.வேம்பூர் பெயரைச் சொல்லி ஆதி அரண்மனையில் ராணியின் நகையை திருடி விடுகிறார்.ஆதியை கண்டுபிடிக்க பசுபதி செல்லும் போது ஆதியின் திறமையை கண்டு வியந்து தன்னுடன் கூட்டாளியாக சேர்த்து கொண்டு வேம்பூருக்கு அழைத்து வருகிறான். பக்கத்து கிராமமான மாத்தூருக்கும் வேம்பூருக்கும் காலகாலமாக பகை இருந்து வருகிறது. ஆதியை பல வருஷங்களாக தேடி வரும் மாத்தூர் காவலாளி கரிகாலன் ஆதியை கண்டவுடன் அவனை பிடித்து மனிதபலி கொடுக்க அழைத்துச் செல்கிறான். ஏன் மாத்தூர் மக்கள் ஆதியை தேடினார்கள்? காரணம் என்ன? என்பதே படத்தின் இறுதி அதிரடியான அட்டகாசமான மர்ம முடிச்சுக்கள்.
வரிப்புலி-சின்னானாக ஆதி, கொம்பூதியாக பசுபதி, வனப்பேச்சியாக தன்ஷிகா, சிமிட்டியாக அர்ச்சனா கவி, ஒச்சாயியாக டி.கே.கலா, மாத்தூரானாக கரிகாலன், மொசக்காதனாக சிங்கம்புலி, விரணனாக திருமுருகன், பாளையக்காரராக விஜய் சுந்தர் ஆகியோர் அழகிய தமிழ் பெயர்களுடன் யதார்த்தமான கிராமத்துப் பாத்திரப் படைப்புகள் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உயிரோட்டமான வீரமான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
தோகைமாயனாக பரத், வஞ்சியாக அஞ்சலி, தேவதாசி குஞ்சரத்தம்மாளாக ஸ்வேதாமேனன், பாளையக்காரி கணகநுகாவாக ஸ்ருதி பிரகாஷ் ஆகியோர் சிறப்புத் தோற்றமாக சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாக்கள்.
நா.முத்துக்குமாரின் வரிகள் நிலா நிலா போகுதே, உன்னக் கொல்லப் போறேன் என்ற தாலாட்டும் தென்றலாக, நந்தகுமாரா நவநீத கண்ணா என்ற குழலோசை பாடலும் வீரம் கலந்த சில பாடல்களுடன் விவேகா எழுதிய ஊரே ஊரே என்ற ஊரின் பெருமையைக் கூறும் அதிரடிப் பாடல்களை இசையமைத்திருக்கும் கார்த்திக் இதில் தனி முத்திரை பதித்ததுடன், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.
கதை-வசனம்-சு.வெங்கடேசன். கூர்மையாக வசனங்களில் கதை பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது.
ஒளிப்பதிவு-சித்தார்த். முன்னூறு ஆண்டுகள் பழமையாக காலகட்டம், காடுகள், கூரை வீடுகள், அரண்மனைகள், மலைமுகடுகள், மலையருவி, காளைச் சண்டை என்று கேமிரா கோணங்கள் தௌ;ளத் தெளிவாக நேர்த்தியாக கண்களுக்கு பிரமிப்பாக தமிழரின் கலாச்சாரத்தை பிரதிபலித்திருக்கும் காட்சிக் கோணங்கள் நிச்சயம் விருது பெரும் பெருமைக்குரியவர்.ஹாட்ஸ் ஆப் டூயு.
கூடுதல் கதை-திரைக்கதை, இயக்கம்-ஜி.வசந்தபாலன். நூற்றாண்டுகளைத் தாண்டிய கதைக்களம், எளிமை, புதுமை, முழுமையோடு புதிய படைப்பில் நம்மை மிரளச் செய்யும் காட்சிப்படைப்புகள், அசாதரணமான முயற்சி, உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி பிரம்மாண்டமாக பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் ஜி.வசந்தபாலன். ஒப்பனை, சிகையலங்காரம், உடையலங்காரம் கிராம வாழ்க்கை முறையையும் என்று அச்சுஅசலாக வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறமையான இயக்கத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. களவு, காதல், நட்பு, உயிர்பலி, மோதலுடன் கமர்ஷியல் செண்டிமென்டும் கலந்த கலவை தான் அரவான்.
No comments:
Post a Comment