Tuesday, March 27, 2012
Monday, March 19, 2012
சுஜாவுக்கு அந்த ரகசியம் தெரியும்!
பதினைந்து வயதில் 'பிளஸ் டூ 'படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுஜா.இவரது சொந்த பெயர் சுஜாதா. கோடம்பாக்கம் அரசினர் பள்ளியில் பத்தாவது படித்துகொண்டிருக்கும்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஒளிப்பதிவாளர் ராஜராஜன் மூலம் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது.முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்தவர் அடுத்த படத்திலேயே கவர்ச்சிக்கு தாவினார்.படங்கள் தோல்வியை தழுவியதால் குத்தாட்டத்துக்கு ரூட்டை மாற்றினார்.ஆரம்பத்தில் அவருக்கு டான்ஸ் ஆடவே தெரியாது.ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியில் கற்றுக் கொண்டார்.குத்தாட்டம் போர் அடித்து விட்டதால் காலுக்கு ஓய்வு கொடுக்க எண்ணி மீண்டும் கதாநாயகி வாய்ப்பு தேடினார். இடையில் சுஜா நாயுடு என்று பெயர் மாற்றினார்.தமிழில் 'கஸ்தூரிமான்', 'மிளகா', 'சொல்ல சொல்ல இனிக்கும்' படங்களிலும், தெலுங்கில் நாகவள்ளி', மற்றும் கன்னடத்தில் 'ஆப்தரக்ஷகா' ஆகிய படங்களில் மெயின் கேரக்டரில் நடித்த சுஜா தற்போது தனது பெயரை சுஜா வாருனீ என மாற்றியுள்ளார்.ஜோசியரின் அறிவுரையாம். வாருனீ என்பது மழைக்கடவுளின் பெயராம்.
சுஜா சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்திருந்தார்.குட்டை கவுனில் வந்து கால் மேல் கால் போட்டு போட்டோ கிராபர்களை குஷிப் படுத்தினார். வடக்கத்திய நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் புடவையில் அடக்க ஒடுக்கமாக வந்திருந்தார்.தமிழ் நடிகை சுஜா கவர்ச்சியில் வந்திருந்தார்.ரிச்சாவிடம் அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்தார் சுஜா.நடிகைகள் விழாக்களுக்கு தொடை தெரிய கவுனில் வருவது எதற்கு தெரியுமா? மறுநாள் இன்டர்நெட்டில் வெளியாகும் அந்த படங்கள் மூலம் பப்ளிசிட்டியும் கிடைக்கும், 'வாய்ப்பும்' கிடைக்கும் என்பதுதான்.
சுஜாவுக்கும் அந்த ரகசியம் தெரியும்!.
"எப்போதும் எல்லா படங்களையும் பண்ணிக்கொண்டிருக்கமுடியாது. குடும்பம் முக்கியம். அம்மா, தங்கை இவர்களை ஒரு ஆணாக நின்று பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை எனக்கு இருந்தது. அதனால் எந்த படங்கள் வந்தாலும் அதை செய்தேன். இப்போது அவர்களை பார்த்துக்கொள்ளும் நம்பிக்கை வந்துவிட்டது.
அதனால் என் ஆத்ம திருப்திக்கு படங்கள் பண்ணவேண்டுமென முடிவெடுத்துள்ளேன். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தெளிவான ஒரு நடிகையாக என்னை தமிழ் சினிமாவில் நிறுத்திக்கொள்ள ஆசை. அதை நோக்கி தான் என் பயணம் "என்கிறார் சுஜா. 'அமளி துமளி'. 'தப்புத்தாளங்கள்' 'காதல் தீவு' படங்களில் நடித்து வருகிறார் சுஜா.
சுஜா சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு வந்திருந்தார்.குட்டை கவுனில் வந்து கால் மேல் கால் போட்டு போட்டோ கிராபர்களை குஷிப் படுத்தினார். வடக்கத்திய நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் புடவையில் அடக்க ஒடுக்கமாக வந்திருந்தார்.தமிழ் நடிகை சுஜா கவர்ச்சியில் வந்திருந்தார்.ரிச்சாவிடம் அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்தார் சுஜா.நடிகைகள் விழாக்களுக்கு தொடை தெரிய கவுனில் வருவது எதற்கு தெரியுமா? மறுநாள் இன்டர்நெட்டில் வெளியாகும் அந்த படங்கள் மூலம் பப்ளிசிட்டியும் கிடைக்கும், 'வாய்ப்பும்' கிடைக்கும் என்பதுதான்.
சுஜாவுக்கும் அந்த ரகசியம் தெரியும்!.
என்ன ஒற்றுமை பாருங்கள்..?
இதற்கு முன்பு ஒருவிழாவில் சுஜா குட்டை கவுனில் வந்திருந்தார்.ரிச்சா புடவையில் வந்திருந்தார்.இருவரும் பக்கத்துபக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.அடுத்தும் அதே....
இதற்கு முன்பு ஒருவிழாவில் சுஜா குட்டை கவுனில் வந்திருந்தார்.ரிச்சா புடவையில் வந்திருந்தார்.இருவரும் பக்கத்துபக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.அடுத்தும் அதே....
Monday, March 12, 2012
அரவான்-விமர்சனம்
சு.வெட்கடேசன் எழுதிய காவல் கோட்டம் என்ற நாவலைத் தழுவி இயக்குனர் வசந்தபாலன் கைவண்ணத்தில் உருவான படம் அரவான்.
வேம்பூர் கிராமத்தின் தலைவன் பசுபதி களவாடுவதில் கில்லாடி.வேம்பூர் பெயரைச் சொல்லி ஆதி அரண்மனையில் ராணியின் நகையை திருடி விடுகிறார்.ஆதியை கண்டுபிடிக்க பசுபதி செல்லும் போது ஆதியின் திறமையை கண்டு வியந்து தன்னுடன் கூட்டாளியாக சேர்த்து கொண்டு வேம்பூருக்கு அழைத்து வருகிறான். பக்கத்து கிராமமான மாத்தூருக்கும் வேம்பூருக்கும் காலகாலமாக பகை இருந்து வருகிறது. ஆதியை பல வருஷங்களாக தேடி வரும் மாத்தூர் காவலாளி கரிகாலன் ஆதியை கண்டவுடன் அவனை பிடித்து மனிதபலி கொடுக்க அழைத்துச் செல்கிறான். ஏன் மாத்தூர் மக்கள் ஆதியை தேடினார்கள்? காரணம் என்ன? என்பதே படத்தின் இறுதி அதிரடியான அட்டகாசமான மர்ம முடிச்சுக்கள்.
வரிப்புலி-சின்னானாக ஆதி, கொம்பூதியாக பசுபதி, வனப்பேச்சியாக தன்ஷிகா, சிமிட்டியாக அர்ச்சனா கவி, ஒச்சாயியாக டி.கே.கலா, மாத்தூரானாக கரிகாலன், மொசக்காதனாக சிங்கம்புலி, விரணனாக திருமுருகன், பாளையக்காரராக விஜய் சுந்தர் ஆகியோர் அழகிய தமிழ் பெயர்களுடன் யதார்த்தமான கிராமத்துப் பாத்திரப் படைப்புகள் படத்தின் வெற்றிக்கு வித்திட்டு உயிரோட்டமான வீரமான நடிப்பில் வாழ்ந்திருக்கிறார்கள்.
தோகைமாயனாக பரத், வஞ்சியாக அஞ்சலி, தேவதாசி குஞ்சரத்தம்மாளாக ஸ்வேதாமேனன், பாளையக்காரி கணகநுகாவாக ஸ்ருதி பிரகாஷ் ஆகியோர் சிறப்புத் தோற்றமாக சிறிது நேரமே வந்தாலும் படத்தின் திருப்புமுனைக்கு காரணகர்த்தாக்கள்.
நா.முத்துக்குமாரின் வரிகள் நிலா நிலா போகுதே, உன்னக் கொல்லப் போறேன் என்ற தாலாட்டும் தென்றலாக, நந்தகுமாரா நவநீத கண்ணா என்ற குழலோசை பாடலும் வீரம் கலந்த சில பாடல்களுடன் விவேகா எழுதிய ஊரே ஊரே என்ற ஊரின் பெருமையைக் கூறும் அதிரடிப் பாடல்களை இசையமைத்திருக்கும் கார்த்திக் இதில் தனி முத்திரை பதித்ததுடன், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.
கதை-வசனம்-சு.வெங்கடேசன். கூர்மையாக வசனங்களில் கதை பட்டை தீட்டிய வைரம் போல் ஜொலிக்கிறது.
ஒளிப்பதிவு-சித்தார்த். முன்னூறு ஆண்டுகள் பழமையாக காலகட்டம், காடுகள், கூரை வீடுகள், அரண்மனைகள், மலைமுகடுகள், மலையருவி, காளைச் சண்டை என்று கேமிரா கோணங்கள் தௌ;ளத் தெளிவாக நேர்த்தியாக கண்களுக்கு பிரமிப்பாக தமிழரின் கலாச்சாரத்தை பிரதிபலித்திருக்கும் காட்சிக் கோணங்கள் நிச்சயம் விருது பெரும் பெருமைக்குரியவர்.ஹாட்ஸ் ஆப் டூயு.
கூடுதல் கதை-திரைக்கதை, இயக்கம்-ஜி.வசந்தபாலன். நூற்றாண்டுகளைத் தாண்டிய கதைக்களம், எளிமை, புதுமை, முழுமையோடு புதிய படைப்பில் நம்மை மிரளச் செய்யும் காட்சிப்படைப்புகள், அசாதரணமான முயற்சி, உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி பிரம்மாண்டமாக பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் ஜி.வசந்தபாலன். ஒப்பனை, சிகையலங்காரம், உடையலங்காரம் கிராம வாழ்க்கை முறையையும் என்று அச்சுஅசலாக வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறமையான இயக்கத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. களவு, காதல், நட்பு, உயிர்பலி, மோதலுடன் கமர்ஷியல் செண்டிமென்டும் கலந்த கலவை தான் அரவான்.
Subscribe to:
Posts (Atom)