Monday, December 19, 2011

தமிழன் கண்ணுக்கு தெரியவில்லையா?-விஜய்யை சாடும் பாரதிராஜா

விஜயை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-
'கறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா? அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா?'
பாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லை? இவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் விஜய்.