Sunday, August 28, 2011

ஹீரோக்களுக்கு உறைக்குமா?

சென்னை அரும்பாக்கத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள வந்தார் சேரன். அது உதவி திட்டங்களை மாணவர்களுக்கும் மக்களுக்கும் வழங்குகிற நிகழ்ச்சி. அதில் பேசிய சேரன்தான் பல டூப்ளிகேட் புகழ் ஹீரோக்களுக்கு உரைக்கிற மாதிரி பேசினார்.
"இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்பட்டாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.
அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த பங்கும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்? என்று கூறினார்.
அவர் யாரை சொல்கிறார் என்பது தினசரி பேப்பர் படிப்பவர்களுக்கு புரியும்.

Thursday, August 11, 2011

மங்காத்தா இசை வெளியீடு


அஜீத்தின் 50 வது  படமான மங்காத்தாவின் இசை வெளியீடு ரேடியோ மிர்ச்சி எப் எம் ஸ்டேஷனில் நடந்தது.
இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, க்ளவுட் நைன் மகத், ஆகியோர் வானொலி நிலையத்துக்கே வந்து இசை ஆல்பத்தை வெளியிட்டார்கள்.
மங்காத்தா பாடல்களை சட்டப்பூர்வமாக நோக்கியாவின் ஓவி ஸ்டோர் மூலம் பதிவிறக்கிக் கொள்ளலாம் என சோனி மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அஜீத்துடன் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய் உள்பட பலரும் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.