Tuesday, July 26, 2011

காதல் தோல்வி?உயிரை மாய்த்துக்கொண்ட ஹீரோ !

 புதுமுகங்கள்அஜய் -சனம் ஜோடியாக நடித்துள்ள படம் 'அம்புலி'. தமிழில் வெளிவரும்முழுமையான 3டி படம் இதுதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதாவது எல்லா காட்சிகளுமே முப்பரிமாணத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம். 'ஓர் இரவு 'என்ற திகில் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள்தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார்கள். பழங்குடியின இளைஞன் கேரக்டரில் நடிக்கிறார் புதுமை இயக்குனர் பார்த்திபன்.
கரணம் தப்பினால் மரண அவஸ்தையை சந்தித்திருப்பார்கள் இப்படக் குழுவினர். காரணம், படப்பிடிப்பு முடிந்த சில நாட்களுக்குள் படத்தின் நாயகன் அஜய் தற்கொலை செய்து கொண்டார். அதுவே படப்பிடிப்பு முடியாமலிருந்தால் என்னாகியிருக்கும் என்று பெருமூச்செரிகிறார்கள் அவர்கள். பெங்களூரை வசிப்பிடமாக கொண்ட அஜய், இப்படத்தின் நாயகி சனம் என்பவருடன் காதல் கொண்டிருந்தாராம். படப்பிடிப்பில் இருவரும் ஓரே அறையில் தங்கியிருப்பது. கொஞ்சுவது என்று இருந்திருக்கிறார்கள். சினிமா காதல் சிக்கலில் தள்ளும் என்று படக்குழுவினர் சொன்ன அட்வைசையும் பொருட் படுத்தாமல் தொடர்ந்திருக்கிறார் அஜய்.
ஆனால் தற்கொலைக்கு இதுதான் காரணமா என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள முடியவில்லை யாராலும். என்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு ஆர்வத்திற்காக சினிமாவில் நடிக்க வந்த அஜய்யின் முடிவு இன்டஸ்ட்ரியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
                                                                  நடிகை  சனம்

Sunday, July 24, 2011

அழகு + கவர்ச்சி = மதுலிகா











கேவலமான காட்சியில் நடித்ததற்காக சோனா வெட்கப்படணும்..-நமீதா

'நடிகை சோனா என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடிக் கொள்ளும் வேலையில் இறங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு எனது அங்கீகாரத்தை வேறு அவர் எதிர்ப்பார்க்கிறார். இது கடைந்தெடுத்த முட்டாள்தனம், 'என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர், போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி காத்தேன். அதற்காக இதுவரை யாரையும் குற்றம் சொன்னதில்லை.

ஆனால் இப்போது நடிகை சோனா என் பெயரைப் பயன்படுத்தி செய்து வரும் செயல் அநாகரீகமானது.

சமீப காலமாக என்னை இமிடேட் செய்வது போலவும் கிண்டலடிப்பது போலவும் சில படங்களில் நடித்து வருகிறார் சோனா. நானும் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் இன்றைய ஆங்கில நாளிதழ் ஒன்றில், 'நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னை அவர் பாராட்டவில்லை' என்றெல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் கூட சில பத்திரிகைகளில் அவர் இப்படிச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

முதலில் இவர் என் நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ் அனுப்பினாரா என்று பார்க்கட்டும். அதுபோன்ற எஸ்எம்எஸ் எதுவும் எனக்கு அவரிடமிருந்து வந்ததில்லை.

யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா?

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான என்னை கொச்சைப்படுத்தும் விதத்தில் 'கோ' படத்தில் கேவலமான காட்சியில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும்? உண்மையிலேயே இவருக்கு என் மீது மரியாதை இருந்தால், இப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னபோதே கோ பட இயக்குநர் கேவி ஆனந்திடம் தனது எதிர்ப்பை இவர் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? அந்தப் படத்தில் வருவதுபோல நான் எந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தேன்...? எந்த அரசியல் கட்சிக்காவது ஆதரவு காட்டினேனா...? அப்படியிருக்கும்போது, என்னை எப்படி இந்த மாதிரி இழிவுபடுத்தலாம்?

என்னைப் பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்களில் காட்சி வைத்துள்ளனர். அந்தப் படங்களின் இயக்குநர்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் யாரிடமும் நான் அதுபற்றி பேசியது கூட இல்லை. அந்த அளவு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கும் என்னை தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஆனால் சோனாவின் செயல், இந்த முறை என் பொறுமையை சோதித்துவிட்டது.

இத்தனை தவறுகளை, தனிமனித தாக்குதலை செய்துள்ள சோனா மீது நான்தான் கோபப்பட வேண்டும். இந்த லட்சணத்தில் நான் அவர் எஸ்எம்எஸ்ஸுக்கு பதில் தரவில்லை என்று கூறியுள்ளார் சோனா.

இந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்."

-இவ்வாறு நமீதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
        

Tuesday, July 19, 2011

மீண்டும் படம் ரிலீஸ் -சோகத்தில் நடிகை !

விக்ரமுடன் அமலாபால் நடித்த “தெய்வத்திருமகள்” படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சிறப்பாக நடித்து இருப்பதாக அமலாபாலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்த நிலையில் இவர் ஏற்கனவே நடித்த சர்ச்சை படமான “சிந்துசமவெளி” சென்னையில் 5 தியேட்டர்களில் திடீரென மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. தெய்வத்திருமகள் போஸ்டர்களோடு சிந்துசமவெளி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
இதனால் அமலாபால் வருத்தமடைந்து உள்ளார். சிந்துசமவெளி படத்தை மறக்க விரும்புகிறேன் என்று தொடர்ந்து கூறி வந்தார். அதில் கணவருக்கு தெரியாமல் மாமனாருடன் கள்ளக்காதல் செய்யும் மருமகள் கேரக்டரில் நடித்து இருந்தார்.
தணிக்கை குழு “ஏ” சான்றிதழ் அளித்தது. இப்படத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. அமலாபாலுக்கு மிரட்டல்களும் வந்தன. அப்படத்தின் இயக்குனர் சாமி வீடு தாக்கப்பட்டது. இதனால் சில நாட்கள் சென்னை வருவதையே அமலாபால் தவிர்த்தார்.
சிந்துசமவெளியில் அனகா  என்ற பெயரில் நடித்தார். எதிர்ப்புகளுக்கு பிறகு பெயரை அமலாபால் என மாற்றிக்கொண்டு “மைனா” படத்தில் நடித்தார். அது ஹிட்டானதால் படவாய்ப்புகள் குவிந்தது."தெய்வத்திருமகள்” படத்திலும் நல்லவேடம் அமைந்தது. அப்படம் ரிலீசாகியுள்ள இத்தருணத்தில் சிந்துசமவெளி படத்தை ரிலீஸ் செய்து இருப்பதால் அதில் அமலாபால் ஆபாசமாக நடித்து இருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் தனது “இமேஜ்” அடிபடும் என்ற கவலையில் இருக்கிறார். அமலா பால் நடிக்கும் சிந்து என்பதற்கு கீழே samaveli என்று சின்னதாக ஆங்கிலத்தில் போட்டிருப்பார்கள்.சிந்து என்பது அமலா பால் நடித்த டப்பிங் படம் என்று பார்த்து ஏமாந்தவர்களும் உண்டு.

Saturday, July 2, 2011

சாதிபெயர்கள் வைத்திருக்கும் ஹீரோயின்களுக்கு தங்கர் பச்சான் கண்டனம்

னனி அய்யர் ,சிந்து மேனன், நித்யா மேனன் ,கவிதா நாயர், சமீரா ரெட்டி, மேக்னா நாயுடு, ஷில்பா ஷெட்டி என  கதாநாயகிகள் தங்கள் பெயருடன் சாதி பெயர்களை இணைத்துக்கொள்வதற்கு, இயக்குன‌ர் தங்கர்பச்சான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
   
"தமிழ்நாட்டில் சாதிகளை ஒழிப்பதற்கு பெரியார் போன்ற தலைவர்கள் பட்டபாடு நாடு அறியும். தெருக்களுக்கு சாதி பெயர்களை வைப்பதை கூட அரசாங்கம் தடை செய்து விட்டது. அப்படி இருக்கும், திரைப்படகளில் மட்டும் சாதி பெயர்களை எப்படி பயன்படுத்தலாம்? இதை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஆதரிக்கக்கூடாது" என்றார் தங்கர்பச்சான்.