Monday, March 28, 2011

சைக்கோ டைரக்டர்

‘வானம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் அனுஷ்கா, சிம்பு, பரத், சோனியா அகர்வால், சரண்யா பொன்வன்னன், படத்தின் இயக்குநர் கிரிஷ் என படக்குழுவினர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்களை காட்டிலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தயாரிப்பாளர் கணேஷின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. படக்குழுவினரை ஓவ்வொருருவராக பேச அழைத்த தயாரிப்பாளர் கணேஷ், “நான் இயக்குநர் கெளதம் மேனன் படத்தில் நடித்திருக்கேன். அப்போதெல்லாம் நடிப்பை இவ்வளோ கஷ்ட்டமா நினைக்கல, ஆன இந்த படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணேன் அதுக்கே என்ன ஒரு வழி பன்னிட்டாரு கிரிஷ். அதை பிறகு சொல்கிறேன் முதலில் உதாரணத்து வேறு ஒரு சம்பவத்தை சொல்கிறேன். என்று ஆரம்பித்தவர்,
படத்தில் பரத்துக்கு ஒரு சண்டைகாட்சி அதில் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் வரும் ஒரு கார் கண்ணாடியை உடைக்க வேண்டும்.
இதுபோன்ற காட்சிகளில் ஒரிஜனல் கண்ணாடிக்கு பதில் வேறு கண்ணாடியை காரில் வைப்போம். ஆனால் கிரிஷ் அதெல்லாம் வேண்டாம் ஒரிஜினல் கண்ணாடிதான் வேண்டும் அப்போதுதான் ஒரிஜனலாக இருக்கும் என்றார். சரி என்று ஒரிஜனல் கண்ணாடியை உடைத்தார் பரத், கண்ணாடியை உடைத்ததுமே அதில் மூன்று துண்டுகள் பரத்தின் கையில் இறங்கிவிட்டது. நல்ல வேளை நரம்பில் படவில்லை. வளியில் துடிக்கும் பரத்தின் கையில் இருந்து ஒவ்வொரு கண்ணாடி துண்டுகளாக நாங்கள் எடுக்க, ரத்தம் வழிந்தது. அதை பார்த்த கிரிஷ் ரத்தத்தை வேஸ்ட் பண்ண வேணாம் சட்டையில துடைச்சுக்க சொல்லுங்க, ஷாட் இன்னும் நல்லா இருக்கும் என்கிறார்அவ்வளவுதான் பரத் ஆடிபோய்ட்டாரு. இவர என்னனு சொல்றது...என்றார் கணேஷ்
வேற என்னத்த சொல்றது..சைக்கோதான்,

"அழுகை வரவில்லையென்றால் இசையமைப்பதை நிறுத்திவிடுகிறேன்" இளையராஜா சவால்

'அழகர்சாமியின் குதிரை' படத்தின் இசை அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர். இதில் இளையராஜாவும் கலந்துகொண்டார்.

இளையராஜா பேச ஆரம்பித்ததுமே நிகழ்ச்சி பரபரப்பாக துவங்கியது. காரணம் அவர் ஆரம்பித்ததே சூப்பர் ஸ்டாரை வைத்துதான். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அப்புக்குட்டியை பார்த்து. "நீ மேடை ஏறியபோது எவ்வளவு பேர் கைதட்டினார்கள் பாத்தியா? ஆனால் அதனால நீ சூப்பர் ஸ்டாராக ஆகமுடியாது. அதேபோல சூப்பர் ஸ்டாரல இந்த வேடத்தில் நடிக்க முடியுமா? அதுதான் படம்." என்று பேச்சை துவங்கியவர். பூகம்பம் ஏன் வருகிறது. அதற்கும் மனிதர்களுக்கும் என்ன சம்மந்தம் என்று எப்போதும் போல புரியாதவாரே பேசியவர்,

"இந்த படத்திற்கு இப்போதுதான் பின்னணி இசை சேர்ப்பு வேலையை முடித்திருக்கிறேன். இப்போது கூட டைட்டில் இசை சேர்ப்பு பணியில்தான் இருந்தேன். இந்த படத்தின் இசையை கேட்கும்போது மக்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும். அப்படி வரவில்லையென்றால் நான் இனி இசையமைப்பதையே நிறுத்தி விடுகிறேன்" என்றார். பிறகு எப்போதும்போல மறுபடியும் எதை எதையோ பேச ஆரம்பித்து இறுதியில் 'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் போஸ்டர்களை பார்த்தபோதே அந்த படம் வெற்றி பெறும் என்று நான் சொன்னவன். அதுபோல இந்த படமும் கண்டிப்பாக வெற்றிபெறும்." என்றார்.